கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், கோத்தா பாருவில் எதிரணித் தலைவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட செயலை பாஸ் கண்டித்தது.
“இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதுடன் மலேசியக் கலாச்சாரத்துக்கு ஏற்புடையதுமல்ல”, என பாஸ் தலைமைச் செயலாளர் தாகியுடின் ஹசான் கூறினார்.
சமுதாயத்தில் பதற்றத்தையும் வெறுப்பையும் ஊட்டும் செயல்களுடன் பாஸ் ஒருபோதும் ஒத்துப்போவதில்லை என்றாரவர்.
ஆளும் கட்சி அதன் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என பாஸ் கேட்டுக்கொள்வதாகவும் அந்த கோத்தா பாரு எம்பி கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டிஏபி-இன் லிம் கிட் சியாங், லிம் குவான் எங் ஆகியோரின் கொடும்பாவிகள் கோத்தா பாருவில் எரிக்கப்பட்டன.
மக்கள் கூட்டணி 2.0 -வுடன் பசுத் தோல் போர்த்திய புலி ஒட்ட வருவது நல்லா தெரியுது.
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவுது.போதும் உங்கள் கபட நாடகம்.உங்கள் நயவஞ்சக உறவு போதும்.உம்னோவுடன் கொஞ்சி விளையாடுங்கள்.மக்களை முட்டாள் ஆகாதீர்