நாளை கோலாலும்பூரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பேரணியைக் கடுமையாகக் கண்டிக்கும் எஸ்யுபிபி அது போன்ற செயல்கள் மலேசியாவை அராஜக பாதைக்கு இட்டுச் சென்று விடலாம் என்று கூறியது.
“ஆர்ப்பாட்டங்கள் எதிர்- ஆர்ப்பாட்டங்கள் என்னும் அண்மைக்கால போக்கு, அவை ‘மஞ்சள் சட்டை அணிந்திருந்தாலும்’ ‘சிகப்புச் சட்டை அணிந்திருந்தாலும்’, மலேசிய வாழ்க்கைமுறைக்கு ஏற்றதல்ல.
“இந்த எதிர்மறையான கலாச்சாரம் அராஜகத்துக்கும் குழப்பத்துக்கும் வழிகோலும். தாய்லாந்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலவரம் இங்கு வேண்டாம். அங்கு வன்முறை தொடர்கிறது. துரதிர்ஷடவசமாக உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது”, என எஸ்யுபிபி தலைமைச் செயலாளர் திங் சியு இயு கூறினார்.
பேரணி ஏற்பாட்டாளர்கள் வரலாற்றுக்கு “மதிப்பளிக்கவில்லை என்றும் திங் குறிப்பிட்டார். செப்டம்பர் 16 மலேசியா உருவான நாள். சாபாவுக்கும் சரவாவுக்கும் அது முக்கியமான நாளாகும்.
“அதற்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்”, என்றாரவர். .
இன்று நான் கோலாலும்பூரில் பல நபர்களை பார்த்தேன் அவர்கள் யாரும் இங்கே உள்ளவர்கள் போல் தெரியவில்லை வெளி மாநிலத்தவர்கள் அவர்கள் என்னை ( இந்தியர்களை ) ஒரு மாதிரியாக முறைத்து பார்த்து விட்டு செல்கின்றனர் .
பெரும்பாலான ஒட்டுமொத்த மலேசியர்களும் இந்த சிவப்பு சட்டை பேரணியை விரும்பாத பட்சத்தில், நம் நாட்டின் சுகபோக ஆளும்கட்சியும், போலீசாரும், இதற்கு பச்சை விளக்கு காட்டியிருப்பது, ஏதோ ஒருவித சூட்சமம் அடங்கியுள்ளதுபோல தோன்றுகிறது. முடிந்தால், மக்கள், நாளை தலைநகரை தவிர்ப்பது நல்லது என்றே எனக்குத் தோன்றுகிறது.