தனேந்திரா, இந்தியர்களை அடகு வைக்காதீர்!

 

makkalsakthi1-மு. குலசேகரன், செப்டெம்பர் 15, 2015.

 

ரிம300 மில்லியன்  நிதியைப் பெற்று  20 லட்சம் மில்லியன்  இந்தியர்களின் வாக்குகளை  பாரிசானுக்கு  அடகுவைக்க  நினைப்பது  முட்டாள்தனமாகும். 2008இல்  இருந்தே  இந்தியர்களின்  போக்கு  பாரிசானுக்கு  எதிராகவே மாறிக்கொண்டு வருகின்றது என்பதை  தனேந்திரன் அறிந்திருந்தும் அறியாமல் இருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது

58  ஆண்டுகளாக பாரிசானை நம்பி  ஏமாந்த  இந்தியர்களின்  வெறுப்பையே இந்த மாற்றம்  காட்டுகிறது என்பதை  பிரதமருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும்  .இதனைச் செய்ச்திருந்தால் நான்  தனேந்திரனை பாராட்டியிருப்பேன்.

 

கேள்விகள் ஏராளம்!    

 

கட்சி ஆரம்பித் தது முதல்  எத்தனை இந்தியர்களுக்கு  குடியுரிமை  வாங்கித்  தந்துள்ளீர் ? எத்தனை மாணவர்களுக்கு  பல்கலைக்கழங்களில்  இடம் வாங்கி தந்துள்ளீர்? வெறும்  4% குறைவாகவே இந்திய மாணவர்கள்  பொது  பல்கலைக்கழகங்கங்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இதைப்பற்றி  நஜிப்பிடம்  நீங்கள் எப்பொழுதாவது  சொல்லியதுண்டா? இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன வியூகம்  வைத்துள்ளீர்?

எத்தனை  இந்திய மாணவர்கள்  பிடிபிஎன் கடன் பெற்று  தரம்  குறைந்த தனியார்  கல்லூரிகளில்  பயின்று  வேலையும்  கிடைக்காமல்  , வாங்கிய கடனையும்  கட்ட முடியாமல் தவிக்கின்றார்கள் என்பதை  இந்த அரசாங்கத்திடம் எப்போதாவது சொல்லியதுண்டா? இதனால் எத்தனை  பெற்றோர்கள் திவால்  ஆகியுள்ளார்கள் என்பதனை  தனேந்திரன்  சற்றேனும் சிந்தித்ததுண்டா?

நாட்டிலுள்ள  10க்கும் மேற்பட்ட  பொதுப்  பல்கலைக்கழகங்களில்  எத்தனை இந்தியர்கள் துணை  வேந்தர்களாகவும் , பேராசிரியர்களாகவும்kula  உள்ளனர் என்று  பாரிசான் அரசிடம் கேட்க  தனேந்திரனுக்கு  தைரியம்  உண்டா? கல்வி  இலாக்காவிலும் கல்வி அமைச்சிலும் எத்தனை இந்தியர்கள் உயர் அதிகாரிகளாகவும்  இடைநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாவும்  உள்ளார்கள் என்று  தனேந்திரனுக்கு
தெரியுமா?

எடுத்துக்காட்டாக, பேரா மாநிலத்தில்  247  இடைநிலைப்பள்ளிகள் உள்ளன. அவற்றில்  வெறும்  4 பள்ளிகளில்  மட்டுமே இந்தியர்கள் தலைமை  ஆசிரியர்களாக  நியமிக்கப்பட்டுள்ளனர் . இதன் விகிதாச்சரம் 1.4% மட்டுமே. இது  குறித்து  தனேந்திரன் , பிரதமரிடம்  சொல்லி அதிக  இந்தியர்களை  தலைமை ஆசிரியர்களாக  நியமிக்க ஆலோசனை  கூறியிருக்கலாமே!

இந்திய  கால்நடை  விவசாயிகளுக்கு என்ன  சிறப்பு  திட்டங்களை  இந்த அரசாங்கம்  கொண்டுள்ளது என்பதை உங்கள் கட்சி  கேட்டிருக்கலாமே!  விவசாயம்  செய்யும்  நிலங்களை  பிடுங்கி  தனியாருக்கு தாரை வார்க்கும்  பாரிசான் அரசை தனேந்திரன்  ஏன் தட்டிக் கேட்கவில்லை?

பூமிபுத்ராக்களுக்கென தனியாக  விவசாயத் திட்டம்,  கால்நடை வளர்ப்புத் திட்டம் என்று பல  திட்டங்களை  கொண்டிருக்கும் இந்த அரசாங்கம்  இந்தியர்களுக்கு என்ன செய்யவிருக்கிறது என்பதனை  ஒரு  தீர்மானமாக  போட்டிருக்கலாமே!.

சமீபத்தில் துணைப்பிரதமர் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள்  தேசிய  ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கின்றன என்று சொன்ன போது  மக்கள சக்தி கட்சி என்ன செய்து கொண்டிருந்தது?  மௌனம் சம்மதத்திற்கு  அறிகுறி என்ற  அடிப்படையில் துணப் பிரதமர்  கூறியதுதான் மக்கள் சக்தி கட்சியின் நிலப்பாடும் என்று  அர்த்தம் கொள்ளலாமா?

 

அரசாங்கத்தில் எத்தனை இந்தியருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது?

 

11 இலட்சம்  அரசாங்க ஊழியர்கள் இருக்கும் இடத்தில் 4..1% அதாவது ஏறக்குறைய  45,000 பேர்தான் இந்தியர்கள். அதிலும் 10 ஆயிரம்  பேர்  தமிழ்ப் பள்ளிகளில் சேவை செய்யும்  தமிழ் ஆசிரியர்கள் , இவர்களைத் தவிர்த்து ஏறக்குறைய 35 ஆயிரம் இந்தியர்களே அரசாங்கப் பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த குறைந்த  எண்ணிக்கை பற்றி  பாரிசான் அரசிடம்  ஏன் கேள்வி கேட்கவில்லை.

2008 இல்  டாக்டர் சுப்ரமணியம் அரசாங்கத் துறையில்  இந்தியர்களின் எண்ணிக்கைய 8% ஆக உயர்த்துவேன் என்று  சொன்னார் . அதுவும் காற்றில்  பறந்து  போயிற்று.

இப்பொழுது  மலேசிய  இந்தியர்கள்  மிகவும்  தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதனை  தனேந்திரன் நினைவில்  கொள்ள வேண்டும். யாருக்கு அவர்களின் ஆதரவு  என்று அவர்கள்  தீர்மானித்துவிட்டார்கள்.

மேற்குறிப்பிடப்பட்டது போல பாரிசான் அரசாங்கத்திடம் எவ்வளவோ  கேட்க வேண்டியது  இருந்தும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு,  makkalsakthi2அமைச்சரவையில்  இடம், மத்திய மாநில  அரசாங்க நிறுவனங்களில் இடம், இந்தியர்களுக்கான  மலிவு வீடமைப்பு திட்டம், 300 மில்லியன்  நிதி உதவி, மற்றும் இவை போன்ற  கிள்ளுக்கீறை தீர்மானங்களால்  இந்தியர்களுக்கு எந்த ஒரு மாற்றமும்  ஏற்படப்போவதில்லை. நீங்களும்  உங்கள்  கட்சி மட்டுமே இதை அனுபவிக்கப்போகிறார்கள், மலேசிய இந்தியர்கள் அல்ல.

ம.இ.கா இதைத்தான் கடந்த 60  வருடங்களாக  செய்துகொண்டிருக்கிறது. இந்தியர்களை இம்மியளவும்  உயர்த்தவியலாத  இது போன்ற தீர்மானங்களை  நிறைவேற்றி  உங்கள்  கட்சிக்காரர்களை வேண்டுமானால் நீங்கள்  குஷிப்படுத்தாலாம். இந்திய மக்கள் ஒரு போதும் நன்மை அடையப் போவதில்ல. மேலும், இந்த ரிம300 மில்லியன் இந்தியர்களைமேம்படுத்தத் போதுமென்று எந்த ஆய்வின் அடிப்படையில் முடிவு செய்தீர்கள் என்று  தெரியவில்லை.

ரிம300 மில்லியன்  நிதியைக் கேட்டு 20 லட்சம் இந்தியர்களின் தலைவிதியை அடமானம் வைக்க நினைக்கும்  தனேந்திரன் தனது கனவுப் பட்டறையில்  இருந்து வெளியே வரவேண்டும்.