அலி திஞ்சு: 20,000 முன்னாள் இராணுவ வீரர்கள் நாளை செயலில் இறங்கத் தயார்

 

Tinjuready1நாளை நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் சிவப்புச் சட்டை பேரணியின் போது “டிஎபி சீனர்கள்” ஏதாவது தொந்தரவு கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 20,000 முன்னாள் இராணுவ வீரர்கள் அங்கு இருப்பார்கள்.

இன்றிரவிலிருந்து ஆயிரக்கணக்கான முன்னாள் இராணுவ வீரர்கள் கோலாலம்பூரில் இன்னும் அறிவிக்கப்படாத இடங்களில் கூடத் தொடங்குவர் என்று மலேசிய முன்னாள் இராணுவ வீரர்கள் மன்றத்தின் தலைவர் முகமட் அலி பஹாரும் (அலி திஞ்சு) கூறிக்கொண்டார்.

டிஎபி சீனர்களுக்கும் சிவப்புச் சட்டையினருக்கும் இடையில் சச்சரவுகள் எழுந்தால் அவர்கள் நடவடிக்கைகளில் இறங்குவர் என்று அவர் மேலும் கூரினார்.

“நாங்கள் வன்செயலை விரும்பவில்லை. ஆனால், அது நடந்தால், நாங்கள் எங்களுடைய 300,000 நண்பர்களைக் கவனித்துக்கொள்வோம். டிஎபி சீனர்கள் தொந்தரவு கொடுக்க விரும்பினால், அவர்களுக்கு எதிராக நிற்கும்படி நான் எனது பையன்களுக்கு உத்தரவிடுவேன். போலீசார் மட்டும் தகறாரைக் கையாள முடியும் என்று நான் நம்பவில்லை”, என்றாரவர்.

“20,000 பேர் இன்றிரவு வந்து சேர்வார்கள். போலீசார் என்ன கூறினார்கள் என்பதை நான் கேட்க விரும்பவில்லை. இது எங்களுடைய உரிமை”, என்று அவர் கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.