அரசாங்க வழக்குரைஞர் கெவின் அந்தோனி மொராய்ஸ் கொலை போன்ற மிரட்டல் நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சவில்லை எனச் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் கூறியது.
“அதன் அதிகாரிகளுக்கு எதிரான இப்படிப்பட்ட கோழைத்தனமான, மிரட்டல் நடவடிக்கைகளைக் கண்டு ஏஜி அலுவலகம் அச்சம் கொள்ளாது”, என அது நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறிற்று.
மொராய்ஸ் இரண்டு வாரங்களுக்குமுன் கடத்தப்பட்டார். அவரது சடலம் நேற்று சுபாங் ஜெயாவில், காங்கிரிட் நிரப்பப்பட்ட பீப்பாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கொடூரச் செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் முழுமையான விசாரணை தேவை என்றும் அது குறிப்பிட்டிருந்தது.
மொராய்ஸ் கடமைக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு அதிகாரி என ஏஜி அலுவலகம் அவரைப் போற்றிப் பாராட்டியிருந்தது.
‘கோச டப்பாக்களை’ வைத்துக் கொண்டு குடுத்தனம் நடத்துகின்றது சட்டத்துறைத் தலைவர் அலுவலகம். இதுல வேற வீராப்பு பேச்சு.
இப்படி வீராப்பு பேசுவதும் அப்புறம் “BALIK KAMPUNG” என புறமுதுகிட்டு ஓடுவதில் வல்லவர்களாயிற்றே !