பேரணி ஏற்பாட்டாளர்களுக்குச் சுத்திகரிப்புக்கு ‘பில்’ அனுப்பப்படும்

rahmநேற்றைய  சிகப்புச்  சட்டைப்  பேரணிக்கு  ஏற்பாடு  செய்தவர்களுக்குச்  சுத்திகரிப்புக்  கட்டணச்  சீட்டு  அனுப்பப்படும்  என   நகர்ப்புற  நல்வாழ்வு,  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  கூறினார்.

“ஆலாம்   பிலோராவிடம்  செலவுத்  தொகையைத்  தெரிவிக்குமாறு  கேட்டிருக்கிறேன். அவர்கள்  கணக்கை  இறுதி  செய்து  கொண்டிருக்கிறார்கள். கட்டணச்  சீட்டு  ஆர்ப்பாட்டத்தின்  ஏற்பாட்டாளர்களுக்கு  அனுப்பி  வைக்கப்படும்”,  என்றவர்  டிவிட்டரில்  கூறினார்.

பேரணி  நடந்து  முடிந்த  பின்னர்   பாடாங்  மெர்போக்கும்  ஜாலான்  பார்லிமெண்டும்  குப்பை  மயமாகக்  காட்சியளித்தன.

பாடாங்  மெர்போக்கில்  மட்டும்  மூன்று  டன்  குப்பை  கிடந்ததாக  துப்புரவு  பணியில்  ஈடுபட்ட  கோலாலும்பூர்  மாநகர்  மன்றப்  பணியாளர்  ஒருவர்  தெரிவித்தார்.

இதற்குமுன்  இதேபோன்றுதான்  குப்பைகளை  அகற்றுவதற்கு ரிம50,000  கேட்டு   பெர்சே 4-க்குக்  கட்டணச்  சீட்டு அனுப்பப்பட்டது.

பெர்சே  கட்டணத்தைச்  செலுத்தவில்லை. நீதிமன்றத்துக்குப்  போகப்  போவதாகக்  கூறிவிட்டது.