ஐஜிபி: பேரணியில் நிகழ்ந்த இன இகழ்வுகளுக்கு வருந்துகிறேன்; புகார்கள் விசாரிக்கப்படும்

lurபோலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்,  நேற்றைய  சிகப்புச்  சட்டைப்  பேரணியில் இனத்தை  இழிவுபடுத்தும்  செயல்கள்  நிகழ்ந்ததற்காக  வருத்தம்  தெரிவித்தார்.

பெட்டாலிங்  ஸ்திரிட்டில்  கலைந்து செல்லுமாறு  உத்தரவு  பிறப்பிக்கப்பட்டும்  கலைந்து  செல்லாமல்  போலீஸ்  அதிகாரிகளின்மீது  போத்தல்களை  விட்டெறிந்த  ஆர்ப்பாட்டக்காரர்களையும் அவர்  கடிந்து  கொண்டார்.

“பேரணிக்கு  முன்பே  எச்சரித்திருந்தேன், எல்லை  மீறிச் சென்று  இனத்தைப்  பழித்துரைக்கக்  கூடாது, மற்ற  இனங்களை  அவமதிக்கும்  பதாதைகள் கொண்டு  செல்லக்கூடாது,  அமைதிக்குக் கெடுதல்  செய்யக்கூடாது  என்று.

“அவப்பேறாக, சிலர்  அதை  மதிக்கத்  தவறி விட்டனர். நான்  எப்போதும்  சொல்வது  இதுதான் ‘berani buat, berani tanggung’ (துணிச்சலாக  செய்தீர்கள்,  துணிச்சலாக  பொறுப்பேற்கவும்  வேண்டும்).

“எனவே,  நாங்கள்  விசாரணையைத்  தொடங்கும்போது  அதையும் இதையும்  சொல்லி வீண்  ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்”, என்றாரவர்.

நேற்றைய  பேரணி  பற்றிச்  செய்யப்பட்டுள்ள  புகார்கள்  குறித்து  வினவியதற்கு   காலிட்  மலேசியாகினியிடம்  இவ்வாறு  விவரித்தார்.