‘சீனா பாபி’ என்று அழைப்பதில் என்ன தவறு? சீனர்கள் பன்றிதானே சாப்பிடுகிறார்கள்

babiசுங்கை  புசார்  அம்னோ  தொகுதித்  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  சீனர்களை ‘சீனா பாபி’(சீனப் பன்றி)  என்று  அழைப்பது  அவர்களை  அவமதிப்பதாகாது  என்கிறார்  . அதற்கு  உணவின் அடிப்படையில்  விளக்கமும்  கொடுத்தார்..

பன்றி  என்பது  மலாய்க்காரர்களுக்குத்தான்  ஆகாது.  பன்றி   சாப்பிடுவது  இஸ்லாத்தில்  தடுக்கப்பட்டிருக்கிறது.

“சீனர்களுக்கு  அதில்  என்ன  பிரச்னை. அது  அவர்களின்  உணவுதானே”,  என்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  அவர்  கூறினார்.

நேற்றைய  ஆர்ப்பாட்டத்தில்  ஆர்ப்பாட்டக்காரர்கள்  சீனச்  செய்தியாளர்களை  “சீனா  பாபி”  என்று  இகழ்ந்துரைத்தது  பற்றி  வினவியதற்கு  ஜமால்  இவ்வாறு  விளக்கமளித்தார்.