1எம்டிபி நிறுவனம் அபு டாபியில் உள்ள இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்துக்கு(ஐபிஐசி)ச் செலுத்திய இன்னுமொரு யுஎஸ்$1 பில்லியனும் காணாமல் போயிருப்பதாக வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) கூறியுள்ளது.
“எம்டிபி அபு டாபி நிறுவனமான ஐபிஐசிக்கு அனுப்பியதாகக் கூறும் $993 மில்லியன் எங்கே என (அபு டாபி) அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள். ஆனால், அதுவும் காணாமல் போய்விட்டதுபோல் தோன்றுவதாக விசயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன”, என அந்த அனைத்துலக நிதியியல் நாளேடு கூறிற்று.
அது பற்றி வினவியதற்கு 1எம்டிபி, ஐபிஐசி அதிகாரிகள் கருத்துரைக்க மறுத்து விட்டதாக அது கூறியது.
இதைப்பற்றி யாரும் கேட்கவும் பேசவும் கூடாது,மீறிப்பேசினால் நீங்கலெல்லாம் மலாய்க்காரர்களின் உணர்வுகளோடு உரிமைகளோடு விளையாடுகிரிர்கல ஜாக்கிரதை இந்த பயணம் ஜலன் சென்றுள். ப்ரிcக்பிஎல்டில் துவம்சம் செய்துவிடுவோம்.
ஐயோ! ஐயோ! வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் மலேசியர்களின் சாபம் இந்த அமீனோ கட்சியை இனி வாழ விடாது.
போகும் வழியில் காணாமல் போய்விட்டால் அது இறைவன் செயல். அதுவும் மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தான்!