கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தி எட்ஜ் பைனான்சியல் டெய்லிக்கும் தி எட்ஜ் பைனான்சியல் வீக்லிக்கும் விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை இரத்துச் செய்தது.
நீதிபதி அஸ்மாபி முகம்மட் அத்தீர்ப்பை வழங்கினார்.
தடைவிதிப்பால் தி எட்ஜுக்கு ஏற்பட்ட இழப்பை மதிப்பிடுமாறு பணித்த நீதிபதி, வழக்குச் செலவாக உள்துறை அமைச்சு ரிம15,000-ஐ தி எட்ஜுக்கு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தடைநீக்க உத்தரவால் தி எட்ஜ் நாளையே பிரசுரிக்கத் தொடங்கலாம் என அதன் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
இதற்கு மேலும் உண்மை எங்கிருக்கின்றது என்று உள்துறை அமைச்சருக்குத் தெரிய வேண்டுமா? இதை விட பெரிய அவமானம் வேறு எதுவும் அரசாங்கத்திற்கு வந்து விடப் போவதில்லை. இத்தீர்ப்பானது ‘தி எட்ஜ்’ பத்திரிகை 1MDB சம்பந்தமாக செய்திகள் பிரசுரித்து வந்தது ஆதாரப் பூர்வமானது என்று நீதிமன்றம் சொல்லாமலேயே சொல்லி விட்டது. நம்பிக்கை நாயகன் கோவிந்தா! கோவிந்தா!. அவன் துணைப் பிரதமர் வந்த 30 நாட்களுக்கு உள்ளேயே அவுட்டா மந்திரியாகி விட்டார். அப்புறம் இவனைப் புதிய பிரதமராக்கப் போறிங்களா? அப்படி ஒன்று நடந்தால் இந்த நாட்டின் நிலை நடுத் தெருவுக்கு வந்து விடும். ஜாக்கிரதை.
ஆனாலும் அப்படியெல்லாம் தி எட்ஜ் வெளிவந்துவிட முடியாது. நீதிமன்றத் தீர்ப்பை எவனும் மதிக்கப்போவதில்லை!
இந்த நீதிபதிக்கு வேலை உயருவது குதிரை கொம்புதான்.
மேல் முறை யீடு ……..செல்வார்களோ…
தீர்ப்பு தீர்ப்பாகவில்லை. மேல் முறையீடு செய்து இந்த தீர்ப்பை நிராகரிப்பார். இதுதான் சத்து மலேசியா.
நீதிபதி அஸ்மாபி முகமட் அதிரடி தீர்ப்பு வழங்கி இருந்தாலும், “மேல் முறையீடு” என்ற பெயரில் மற்றொரு நீதிபதி இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிப்பார்.அப்புறம் என்ன “1 MALAYSIA DAH BANKRAP ” கதைதான்.