ஜோகூர் மசீச இளைஞர்கள்: பிரதமர் சிகப்புச் சட்டைகளைப் பாராட்டுவது சரியல்ல

mca johபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  சிகப்புச்  சட்டைப்  பேரணியைப்  போற்றிப்  பாராட்டுவது  அவர்   இதுகாறும்  எடுத்துரைத்த  வந்துள்ள  மிதவாத  நிலைப்பாட்டையும்   1மலேசியா  சித்தாந்தத்தையும்  விட்டு  விலகிச்  செல்வதாகும்  என  ஜோகூர்  மசீச  இளைஞர்  பகுதி  கூறியது.

“பிரதமரும்  பிஎன்  தலைவருமான  அவர்  அவ்வாறு  செய்தது  தகாது  என  நினைக்கிறோம்”, என  ஜோகூர்  மசீச  இளைஞர்  தலைவர்   கூ  சூன்  பெங்  கூறினார்.

பிரதமருடன்  உறவுகளை  முறித்துக்கொள்ள  வேண்டும்  என்று  பாசீர்  கூடாங்  மசீச  இளைஞர்  பகுதி அறிவித்ததை  அடுத்து  அந்தத்  தென் மாநிலத்தின்  25  தொகுதித்  தலைவர்களும்
வாட்ஸ் எப்பில்  அது  பற்றி  விவாதித்ததாக  கூ  தெரிவித்தார்.

“எங்கள்  கருத்தை  வியாழக்கிழமை  மசீச  மத்திய  தலைமையிடமும்  மசீச  இளைஞர்  பகுதியிடமும்  தெரிவிப்போம்”, என்றாரவர்.

நஜிப்பின்  கூற்றால்  அதிருப்தியுற்றுள்ளா  ஜோகூர்  மசீச  இளைஞர் பகுதியின்  அடுத்த  நடவடிக்கை  பற்றி  வினவியதற்கு  மத்திய  தலைமையின்  அறிவுரைக்குக்  காத்திருப்பதாக  அவர்  சொன்னார்.

நஜிப்புடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளக்  கோரும்  பாசீர்  கூடாங்  தொகுதியின்  முடிவை  ஜோகூர்  மசீச  இளைஞர்  பகுதி  மதிக்கிறது  ஆனால்,  அதுபோன்ற  ஒரு  கடுமையான  நடவடிக்கை  தேவையில்லை  என  கூ  கூறினார்.

“அவர்களின்  முடிவை  மதிக்கிறோம். ஆனால்,  அது  ஜோகூர்  மசீச  இளைஞர்  பகுதியின்  நிலைப்பாடு  அல்ல”, என்றார்.