புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் எதிரணிக் கூட்டணியான பக்கத்தான் ஹராபான், அதன் முதல் நடவடிக்கையாக சிறையில் உள்ள அன்வார் இப்ராகிம்தான் பிரதமருக்கான அதன் வேட்பாளர் என அறிவித்துள்ளது.
அதாவது, பொதுத் தேர்தலில் அது வெற்றிபெற்றால் அன்வார் பிரதமராவார்.
இதனை அறிவித்த நாடாளுமன்ற எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பிகேஆர், டிஏபி, பார்டி அமானா நெகரா(அமானா) ஆகிய மூன்றும் இம்முடிவில் ஒன்றுபட்டிருப்பதாகக் கூறினார்..
“பொருளாதார நெருக்கடியையும் அரசின் அத்துமீறல்களையும் சமாளிக்கவும், மக்களின் நல்வாழ்வையும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்தவும் மிகவும் தகுதிபடைத்த தலைவர் அன்வார் என்று நாங்கள் நம்புகிறோம்”, என வான் அசிசா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சரியான முடிவுதான்…! நீங்கள் சிலாங்கூர் மந்திரி பெசராக வருவதற்கு இந்த பாஸ் கட்சி காரங்களும் அதன் தலைவனும் தான் அவங்களுக்கு சரியான ஒரு அடி இது.
பரிசான் ஆதரவுவாளர்கள் கூட, அன்வார் சிறையில் இருந்து வந்து நமது நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள் ! நமது நாடு எதிர்நோக்கும் சவால்களை பார்த்தால் இன்றைய பிரதமர் எப்படி சமாளிக்க போகிறாரோ !
கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வேண்டும் உம்னோ காரன்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் .
நம்பிக்கை கூட்டனிக்கு வாழ்த்துக்கள்.ஆனால் ஒரு தமிழன் தலையும்
இல்லையே வருத்தமாகயிருக்கு.!.