பக்கத்தான் ஹராபானின் பொதுக் கொள்கைக் கட்டமைப்புடன் பார்டி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்)வுக்கு உடன்பாடு இல்லை என்று சில எதிரணித் தலைவர்கள் கூறிக் கொண்டிருப்பதை அக்கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வன் நிராகரித்துள்ளார்.
பக்கத்தானின் பொதுக் கொள்கை தம் கட்சிக்கு ஏற்புடையதே என்று கூறிய அருட்செல்வன் 2013-இலேயே பக்கத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கையைத் தம் கட்சி ஏற்றுக்கொண்டதைச் சுட்டிக்காட்டினார்.
“எனவே, நாங்கள் பொதுக் கொள்கையை ஏற்கவில்லை என்பது முற்றிலும் பொய்யாகும். நான் நினைக்கிறேன், (செர்டாங் எம்பி) ஒங் கியான் மிங்கும் (ஷா ஆலம் எம்பி) காலிட் சமட்டும் ஏதோ தீய நோக்குடன்தான் இப்படிச் சொல்லி வருகிறார்கள்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பி.எஸ்.எம். பக்காத்தான் ஹரபானில் சேர்வது உத்தமம்.
அருட்செல்வன் ஒரு அடி மட்ட மு…. துற்று உள்ள போதே பயன் படுதி கொள்ள தெரியதா அடி மட்ட மு….
பி.எஸ்.எம். கட்சியின் சித்தாந்தங்களை நேரிடையாக இந்நாட்டு மக்களிடையே பரப்புவது என்பது அரசியல் சாணக்கியமற்ற காரியம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எப்படி கசப்பான மருந்தை இனிப்பான மேல் குப்பியைக் கொண்டு பிள்ளைகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கக் கொண்டார்களோ அதைப் போல தங்கள் கட்சியின் சித்தாதங்களை தொழிலார் வர்க்கம் மேம்பட வேண்டி செய்கின்றோம் என்ற போர்வையில் செய்யப் பழகிக் கொள்ளுங்கள். அதை விடுத்து தேர்தல் காலங்களில் தங்கள் கட்சி கொள்கைப் பேச்சாளர்கள் சோஷலிச சித்தாந்தங்களைப் பேசிக் கொண்டிருந்தால் மக்களின் வாக்குகளைப் பெற முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ஊரோடு ஒட்டி வாழப் பழகுங்கள். வெற்றியடைவீர்கள்.
அருட்செல்வன் எதையாவது கிளப்பி விடுவதே வேலையாக கொண்டுள்ளார் ! ”உழவன் மடிகிறான் பொங்கல் தேவையா” என்று கேட்ட ஆசாமி , மறக்க முடியும்மா ?
எல்லாம் நீங்களும்எல்லா அரசியல் சாக்கடைகளும் உங்கள் கூட்டதாரும் சுரண்டுவதற்கு மக்களை பயன் படுத்தும் யுக்தி ..
இல்லை என்றால் நீ தனித்து நிக்கபோரியா ?
ஏன் இந்த கூட்டத்துக்கு நமது தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை.(Pakatan Harapan)மலாய்க்கார ர்களுக்கும்,சீனர்களுக்கும்தானா?நம் இனத்தை இவர்களுக்கு ஓட்டுபோட மட்டும் தான் பயன்படுத்துவார்களோ?
பாரிசானுக்கு ஆள்சேர்க்க ஒரு கூட்டம் ! எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஆள்சேர்க்க ஒருகூட்டம் !! இனத்துக்காக பேச ஒருத்தனுமில்லை …
பி. எஸ். எம்மைச் சேர்த்தால் என்ன குறைந்து விடப் போகிறது. அங்கே நம்ம தலை ஒன்னு இருகிட்டுமே
போங்கடா நிங்களும் உங்கள் கூட்டனியும்,
PAKATAN HARAPAN இல் இன வாரியான கட்சிகள் எதுவும் இல்லையே. அனைத்து கட்சிகளும் அனைத்து இனங்களையும் அங்கத்தினர்களாக கொண்டவையாதலால், அதனில் தனி இன கட்சி என்று ஒன்றும் இல்லையே. ஆக நம்மவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் அங்கம் பெற்று நமது பலத்தை வலுப்படுத்தவேண்டும். BN இல் தனி தனி இன வாரியான கட்சிகள் இருந்து எண்ணத்தை சாதித்தனர்? கையேந்தும் நிலைதானே. இந்த புதிய கூட்டணி மலேசிய மக்கள் கூட்டணி. ஆக இங்கே இன வாரியான பிரச்சினைகள் சிறிது குறையும். காரணம் ஒவ்வொரு கட்சியிலும் எல்லா இனத்தவரும் இருப்பதால், அவரருடைய கட்சியில் எழும் இன வேறுபாடுகள் அந்தந்த கட்சியிலேயே விவாதிக்கப்பட்டு முடிவேடுக்கப்பட்டுவிடும். பின்பு கூட்டணியில் எல்லா மக்களின் முன்னேற்றத்தை பற்றி விவாதித்து முடிவெடுத்து செயல்படுத்த ஏதுவாக இருக்கும். இதுவும் ஒரு நல்ல மாற்றமாக இருக்கலாம் அல்லவா? எவ்வளவு நாளைக்குதான் குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டிருப்பது? இந்தோனேசியா போல நம் நாட்டில் ஒரு அரசியல் கலாச்சாரம் இல்லை. அங்கே ஒருவரின் பெயரைக்கொண்டு அவருடைய இனத்தை இனம் காண முடியாது. ஆனால் அவர் தனது சொந்த கலாச்சாரத்தை பின்பற்ற எந்த தடையும் இல்லை. ஆக அவர்கள் அரசாங்கத்தில் வின்னப்பிற்கும் எதனையும் அவரின் இனம் வாரியாக பரிசீலனை செய்ய இயலாததால், எல்லோருக்கும் சமமான வாய்ப்புக்கள் அளிக்கப்படுகின்றன. இங்கே அப்படியில்லையே. நன்மையை அடைய சில மாற்றங்கள் நடந்தே ஆகவேண்டும். மாற்றங்களை வரவேற்ப்போம். நம்மையும் நமது நாட்டையும் இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.