கிம்மா ஒரே வகைப்பள்ளி முறையை ஆதரிக்கிறது

 

kimmapresidentஇந்நாட்டில் ஒரே வகைப்பள்ளி முறைக்கு மலேசியன் இந்தியன் முஸ்லிம் காங்கிரஸ் (கிம்மா) ஆதரவு அளிக்கிறது என்று அதன் தலைவர் செனட்டர் சைட் இப்ராகிம் காதர் இன்று கூறினார்.

மாணவர்களிடையே ஒற்றுமையை பெருமளவிற்கு உருவாக்க ஒரே வகைப்பள்ளி முறை சிறப்பானதாக இருக்கும். மேலும், அது வேறுபட்ட சமூகங்களுக்கிடையிலான தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றாரவர்.

நேற்று, கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் ஒரே வகைப்பள்ளி பற்றிய பிரச்சனைகள் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அதன் முக்கியத்துவம் குறித்து நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் கூட்டாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய சைட் இப்ராகிம் மேற்கண்டவாறு கூறினார்.-

-பெர்னாமா