சீனத் தூதர் இடைக்கால வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தார்

visitமலேசியாவுக்கான  சீனாவின்  தூதர்  ஹுவாங்  ஹுய்காங், இடைக்கால  வெளியுறவு  அமைச்சரான  உள்நாட்டு  வாணிப, பயனீட்டாளர்  விவகார  மற்றும்  கூட்டுறவு  அமைச்சர்  ஹம்சா  சைனுடினின்  அலுவலகத்துக்கு  இன்று  காலை  சென்றார்.

காலை  மணி  11.35க்கு ஓர்  உதவியாளருடன்  அவர்  அங்கு  சென்றார்.

அவருக்கு  முன்னதாக  முன்னாள்  அமைச்சரும்  சீனா மீதான  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  ஆலோசகர்  ஒங்  கா  திங்கும்  அங்கு  சென்று  காத்திருந்தார்.

பெட்டாலிங்  ஸ்திரீட்  பற்றிக்  கருத்துரைத்ததற்கு  விளக்கம்  கேட்பதற்காக  ஹுவாங்  அழைக்கப்பட்டிருப்பதாக  தெரிகிறது.

பிற்பகல் 12.20க்கு  அவர்  ஹம்சாவைச்  சந்திக்கச்  சென்றார்.

அச்சந்திப்புமீது  செய்தியாளர்  கூட்டம்  எதுவும்  நடத்தப்படாது  என்று   ஹம்சாவின்  உதவியாளர்களில்   ஒருவர்  கூறினார். ஆனால்  விஸ்மா  புத்ரா  பின்னர்  அதிகாரப்பூர்வ  அறிக்கை  ஒன்றை  வெளியிடும்.