வெளியுறவு துணை அமைச்சர் ரீஸல் நைனா மரைக்கான், சீனத்தூதர் ஹுவாங் ஹுய்காங்கை வெளியுறவு அமைச்சுக்கு அழைத்தபோது நெறிமுறைகளைச் சரியானபடி பின்பற்றவில்லை.
ஹுவாங்கை வெளியுறவு அமைச்சு விளக்கம் கேட்பதற்கு அழைப்பதாக இருந்தால் மலேசிய வெளியுறவு அமைச்சர்தான் அழைக்க முடியும், அதுவும் பிரதமருடன் ஆலோசனை கலந்த பின்னரே அழைக்க முடியும் எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார்.
அவர்கள் இல்லாத நிலையில் இடைக்கால வெளியுறவு அமைச்சராக இருப்பவர் உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின்.
“இடைக்கால வெளியுறவு அமைச்சராக ஹம்சா இருப்பதால் துணை அமைச்சர் தூதரை அழைக்க முடியாது”, என நஸ்ரி கூறினார்.
அப்படியானால், ஜூலை 28-இல் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் துணை அமைச்சரான ரீஸல் தவறு செய்து விட்டாரா என்றால் அதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை நஸ்ரியால்.
“எனக்குத் தெரியவில்லை. ஆனால், நம் நிர்வாக முறையில் துணை அமைச்சர் அமைச்சரைப் பிரதிநிதிப்பதில்லை.
“இன்னொரு அமைச்சரால்தான் முடியும். இப்போது இடைக்கால வெளியுறவு அமைச்சராக இருப்பவர் ஹம்சா”, என்றார்.
ஹம்சா தடுத்து விட்டதால் ஹுவாங்குக்கு விடுத்திருந்த அழைப்பாணை இரத்துச் செய்யப்பட்டதாக விஸ்மா புத்ரா அறிவித்திருந்தது.
“நாட்டில் எல்லாம் நல்லவிதமாக இருப்பதையும் பாதுகாப்பாக இருப்பதையும், சீன-எதிர்ப்புணர்வு இல்லை என்பதையும் சீனச் சுற்றுப்பயணிகளுக்கு உணர்த்துவதற்காகவே தூதர் பெட்டாலிங் ஸ்திரீட் சென்றதாக என்னிடம் விளக்கினார்.
“அதற்காகத்தான் அங்கு சென்றார். ஆக, நமக்கு நல்லதுதான் செய்திருக்கிறார்”, என நஸ்ரி தெரிவித்தார்.
சீனத் தூதர் அவருடைய செயல்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அது தேவையில்லை. தூதர் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அவர் தப்பு எதுவும் செய்யவில்லையே”, என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த து..கன் தான் என்னமோ மலாய்க்கார பூமி புத்ரா என்ற எண்ணம்.- பச்சோந்திகளுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? மற்றவர்கள் மலேசியாவை புகழ்ந்தால் அது உள்நாட்டு விவகாரத்தில் தலை இடுவதில்லை -ஆனால் குறையை எடுத்துக்கூறினால் அது உள் நாட்டு விவகாரத்தில் தலைஇடுவதாகம். இப்போது புரிகிறதா? சப்பினால்தான் பலன்.
இது அந்த (திடீர்) துணை அமைச்சர் து???ன் நொன்னைக்கு தெரியாதோ! அப்ப இதுகெல்லாம் சம்பளம் வாங்கிக்கிட்டு நாக்காளியை சூடாக்கிக்கிட்டு இருக்குதுக (மொட்ட ? ?) மரகட்டைகள்! மக்களோட வரிப்பணம் நாசமா போகுது !
அதனாலென்ன! நமது அமைச்சர்களுக்கு அறிவு குறைவு என்பது தெரிந்த விஷயம் தானே!
சீன தூதர் செய்தலால் அவர் “நமக்கு நல்லதுதான் செய்திருக்கிறார்”. இதுவே லிம் கிட சியாங் செய்திருந்தால்?
நெறி முறைகளை சரியாக பின்பற்றாத ஆட்சிதானே இப்பொழுது நடக்கிறது.மற்றவர்களை குறை சொல்ல உனக்கு எந்த அருகதையும் இல்லை.வெந்தவன் வேகாதவன் அரைவேக்காடு எல்லாம் அமைச்சரவையில் இருந்தால் இதுதான் நடக்கும்.அண்டை நாடான சிங்கப்பூர் அரசாங்கத்தை பார்த்து இந்நாடு வெட்கப்பட வேண்டும்.தகுதியானவர்கள் உள்ளதால் அந்நாடு முன்னேறியுள்ளது.
ஆட்சி நிர்வாகத்தில் விவரம் அறிந்த , அறிவார்ந்த அமைச்சர்கள் குறைவாகவே உள்ளனர் என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது !
தேர்தலுக்குப் பின் அமைச்சரவையை அமைக்க நஜிப் கஷ்டப்பட்டார். அப்படியானால் அந்த அமைச்சரவை மாற்றத்தைச் செய்யும்போது எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பார். அந்தக் கஷ்டத்தின் விளைவுதான் இந்த அரைவேக்காடுகளின் பிரவேசம்!!! இறைவா எந்நாட்டைக் காப்பாற்று!!!!!!!!!!!!!!!!!!!!