முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா கட்சியிலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுவோருடன் கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் தலைவர் ரஸ்லான் ரபியும் சேர்ந்து கொண்டிருக்கிறார்.
முன்னாள் தெமர்லோ எம்பி-ஆன சைபுடின் அம்னோவில் தொடர்ந்திருக்க விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என ரஸ்லான் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“மலாய்க்காரர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் அம்னோவின் திட்டம் தம்முடைய புதிய அரசியலுக்கு ஒத்து வராது என்றவர் நினைக்கிறார் என்பது தெளிவு.
“அவருடைய புதிய அரசியலை மக்கள் ஏற்பார்கள் என்றவர் நினைத்தால் ஒரு புதிய கட்சியைத் தொடங்கலாம் அல்லது எதிரணியில் சேரலாம்”, என்று ரஸ்லான் கூறினார்.
சைபுடின் பக்கத்தான் ஹராபான் வட்டமேசை கூட்டத்தில் கலந்து கொண்டதிலிருந்து கட்சியிலிருந்து விலகச் சொல்லி அவருக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது.
ஏன்? மற்ற பிரதேச இளைஞர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? பரதேசம் போய் விட்டார்களா!