சீனர்களைப் பலிகடா ஆக்குவதை நிறுத்துவீர்: மசீச இளைஞர் தலைவர் ஆவேசம்

mcaமற்ற  கட்சிகளின்  தலைவர்கள்  வெளிநாட்டு உதவியை  நாடுகிறார்கள்,  வெளிநாடுகளின்  தலையீட்டை  விரும்புகிறார்கள்  ஆனால்,  சீன  மலேசியர்கள்  ஒருபோதும்  சீனாவின்  உதவியை  நாடியது  இல்லை  என  மசீச  இளைஞர்  தலைவர்  சோங்  சின்  வூன்  கூறினார்.

“மற்ற  கட்சித்  தலைவர்கள்  புகார்  செய்வதற்கு  வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஒரு  கட்சித்  தலைவர்  உதவி  கேட்க  அமெரிக்கா  சென்றார்.

“ஆனால், சீனர்கள்  உதவி  கேட்டு  சீனாவுக்குச்  செல்வதை  நான்  காணவில்லை. அதனால், குளறுபடி  செய்ய  வேண்டாம். எல்லாவற்றுக்கும்  சீனர்களைப்  பலிகடா  ஆக்க  வேண்டாம்”, என்றவர்  எச்சரித்தார்.