‘1997 போல் அல்லாமல் ரிங்கிட்டின் சரிவு ஏற்றுமதிக்கு உதவவில்லை’

analyse1997-இல் ஆசிய  நிதி  நெருக்கடியின்போது  ரிங்கிட்  மதிப்பு குறைந்தது  நம்முடைய  ஏற்றுமதி  உயர்வதற்கு  உதவியது.  ஆனால்,  இப்போது ரிங்கிட்டின்  மதிப்பு  படுவீழ்ச்சி  அடைந்திருந்தாலும்   இதுவரை  ஏற்றுமதி  உயரவில்லை, நாட்டின்  பற்று-வரவு  நிலையும்  மேம்படவில்லை  என்கிறார்  ஆய்வாளர்  ஒருவர்.

1997-இல்  ரிங்கிட்  மதிப்பு  குறைந்தபோது  ஏற்றுமதி  உடனே  உயர்ந்தது  என்று  மெரில் லிஞ்ச்  நிறுவனத்தின்  பொருளாதார  வல்லுனர்  சுவா  ஹாக்  பின்  கூறினார்.

1997-இல்  ஏற்றுமதிகள்  0-இலிருந்து 1998இன்  முற்பகுதியில்  40 விழுக்காடாக  உயர்வு  கண்டன  என்று  சுவா  பைனான்சியல்  டைம்ஸில்  சுட்டிக்காட்டினார்.

“ஆனால், (ரிங்கிட்) இப்போது  மதிப்பு  குறைந்திருந்தும்  ஏற்றுமதிகள் உயரவில்லை, வணிகப்  பற்று-வரவு  நிலையும்  மேம்படவில்லை”, என்றாரவர்.