கனி வெளியில் வந்து உண்மைகளைச் சொல்ல வேண்டும்

gani patilமுன்னாள்  சட்டத்துறைத்  தலைவர்(ஏஜி)  அப்துல்  கனி  பட்டேய்ல் வெளியில் வந்து  1எம்டிபி  ஊழல்  பற்றிய  உண்மைகளை  எடுத்துரைக்க  வேண்டும்  என  வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

போலீஸ்  சிறப்புப் பிரிவு (எஸ்பி)  முன்னாள்  துணைத்  தலைவர்  அப்துல்  ஹமிட் படோர்  அரசாங்கத்துக்கு  எழுதி  ஊடகங்களில்  வலம்  வந்து  கொண்டிருக்கும் ஒரு  திறந்த  மடலில்  இவ்வாறு  வலியுறுத்தினார்.

ஆகக்  கடைசியாக  கனியைச்  சந்தித்ததை  நினைவுகூர்ந்த ஹமிட்,  1எம்டிபி  விவகாரம்  பற்றி  அவர்  துணிச்சலாகக்  கருத்துரைத்ததாகக்  குறிப்பிட்டார்.

அவ்விவகாரத்தில் எல்லாம்  “தெள்ளத்  தெளிவாக  இருப்பதாய்”  கனி கூறினாராம்.

“ஆனால், அவர்  ‘பதவியிலிருந்து அப்புறப்படுத்த  பிறகு’ மெளனமாகி  விட்டார், வாயே  திறப்பதில்லை”, என  ஹமிட்  அக்கடிதத்தில்  குறிப்பிட்டார்.