நாளையிலிருந்து இரண்டு நாள்களுக்குப் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்படும்

schoolகிளந்தான், சரவாக், சாபா, லாபுவான்  ஆகியவை  தவிர்த்து  மற்ற  மாநிலங்களில் உள்ள பள்ளிகளை  நாளை  தொடங்கி  இரண்டு  நாள்களுக்கு  மூடும்படி  கல்வி  அமைச்சர்  மஹாட்ஸிர் காலிட்  பணித்துள்ளார்.

தீவகற்ப மலேசியாவில்  பல  பகுதிகளில்  புகைமூட்டத்தின்  விளைவாகக்  காற்றின்  தரம் ‘ஆரோக்கியமற்றதாகவும்’ ‘ஆரோக்கியத்துக்கு  மிகவும்  கேடு  செய்வதாகவும்’  இருப்பதாக  அறிவிக்கப்பட்டதை  அடுத்து  அமைச்சர்  அவ்வாறு  அறிவித்தார்.

பள்ளிகள்  மூடப்பட்டாலும் பிடி3, எஸ்டிஏம், எஸ்பிம்,  எஸ்டிபிஎம்  தேர்வுகள் திட்டப்படி  நடக்கும்  என்றும்  அவர்  சொன்னார்.