பெர்காசா: மலாய்க்காரர்கள் அமைதி காத்து, பெர்காசாவில் சேர வேண்டும்

 

Perkasaasksforcalmமலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடும் பெர்காசா இப்போதைக்கு எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காது, ஏனென்றால் மலாய் சமூகம் தலைமைத்துவ நெருக்கடியில் சிக்கியுள்ளதோடு பெரும் குழப்பத்தில் இருக்கிறது என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.

மாறாக, பெர்காசா உறுப்பினர்கள் அந்த அரசு சார்பற்ற அமைப்புக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்து அதற்கு வலுவூட்ட வேண்டும். அவர்கள்தான் அடுத்த பொதுத் தேர்தலின் முடிவை நிர்ணயிப்பவர்கள் என்றாரவவர்.

“இரண்டு மலாய்க்காரர் கட்சிகளும் (பாஸ் மற்றும் அம்னோ) சீர்குலைந்துள்ளன. அவற்றின் மீது நம்பிக்கை வைக்க முடியாது. முதலில் அம்னோ, அதன் துணைத் தலைவர் முகைதின் யாசினை நீக்கியது. இன்னும் பலரும் நீக்கப்பட்டனர்.

“அவர்கள் 1எம்டிபி விவகாரத்துடன் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் அங்கு பெரும் குழப்பம் இருக்கிறது.

“இன்னொரு பக்கம், தலைமைத்துவ நெருக்கடி இருக்கிறது. பாஸ் பிளவுபட்டு விட்டது. தலைவர்கள் அவர்களின் சத்திய வாக்கை மறந்து விட்டனர். எல்லாம் நெருக்கடிதான்.

“ஆகவே, தற்போதைக்கு மலாய்க்காரர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சத்தம் போடாதீர். மந்தை மந்தையாக பெர்காசாவில் சேருங்கள்”, என்று இப்ராகில் அலி இன்று ரவாங் தாமான் துன் தேஜா பெர்காசா ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது கூறினார்.