மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின், நாட்டைப் பாதுகாக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “பத்திரமாக வெளியேற” இடமளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
“அவர் பத்திரமாக வெளியேற வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர் பதவி விலகிச் செல்வதை எளிதாக்குவோம்”, என காடிர் நேற்றிரவு தம் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
“எது முக்கியம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்- ஊழல் குற்றத்துக்காக அவரைக் கூண்டில் நிறுத்துவதா, நாட்டைப் பாதுகாப்பதா?”.
கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படலாம் என்ற பயத்தால் நஜிப் பதவி விலக மாட்டார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியபோது அவர் புதிதாக எதையும் சொல்லவில்லை என காடிர் குறிப்பிட்டார்.
ரோபர்ட் முகாபே 35 ஆண்டுகளாக ஸிம்பாப்வே அதிபராக இருந்தபோது அந்நாடு பட்ட துன்பங்களை அவர் சுட்டிக்காட்டினார். அவரது ஆட்சியில் ஸிம்பாப்வே பொருளாதாரம் படுவீழ்ச்சி கண்டது. அதன் டாலரும் மதிப்பிழந்து கிடந்தது.
“நமது பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் செல்லும்போது முகாபேயைப்போல் அவரே(நஜிப்) ஆட்சியில் இருக்கட்டும் என்று விட்டு வைக்கப்போகிறீர்களா? அல்லது பத்திரமாக வெளியேறிச் செல்ல இடமளிக்கப் போகிறோமா?
“அவரைப் பழி வாங்கும் வேட்கையை ஒதுக்கி வைத்து நாட்டை அழிவிலிருந்து காப்பதில் கவனம் செலுத்துவோம். நடப்பு நிலைமை தொடருமானால் அதனால் மோசம் நமக்குத்தான்”, என காடிர் எடுத்துரைத்தார்.
நஜிப் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் துணிச்சல் முகம் காட்டுகிறார்.
“ஆனால், அவருக்குத் தெரியும், பதவி விலகினால் அல்லது சட்டத்துறை தலைவர் அலுவலகம், போலீஸ், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் ஆகியவை மீதுள்ள கட்டுப்பாட்டை இழந்தால் உடனே கைது செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்படுவோம் என்பது.
“இந்த அழிவைத் தடுத்து நிறுத்த எதுவும் செய்யாதிருந்தால் வருங்காலத் தலைமுறையினர் நம்மைத்தான் குறை சொல்வார்கள்…..நம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்”,என காடிர் வலியுறுத்தினார்.
பிலிப்பீன்ஸ் பற்றிக் குறிப்பிட்ட காடிர் மலேசியாவைவிட நல்ல நிலைமையில் இருந்த நாடு அது என்றார்.
“ஒரு மோசமான தலைவரும் அவரின் மனைவியும் அதைக் குட்டிச் சுவராக்கினர். (பெர்டினண்ட்) மார்க்கோஸ் இறந்து நீண்ட காலமாகி விட்டது. ஆனால், அவரும் அவரின் மனைவியும் ஏற்படுத்திய அழிவிலிருந்து பிலிப்பீன்ஸ் இன்னும் மீட்சி பெறவில்லை.
“மார்க்கோஸும் பணத்தைத் தண்ணீர்போல் செலவிட்ட அவரின் மனைவியும் 1986 பிப்ரவரி 25-இல் வெளியேறி இருக்க மாட்டார்கள் அமெரிக்கா அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காமலும் அதிபர் கொராசோன் அக்குவினோ அவர்கள் பத்திரமாக வெளியேற இடமளிக்காமலும் இருந்திருந்தால்”, என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
நன்கொடை நம்பிக்கை நாயகனை பத்திரமாக வெளியேற்ற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. சட்டம் உங்கள் கையில் என்ற நினைப்பா? அதிகாரம் உங்கள் கையில் வர அவருக்கு பாதுகாப்பான வழியை திறந்து விட நீங்கள் அதிகாரத்துவ தரகரா? அவர் வெளியேற, அனைத்து ஊழல்களையும் பஞ்சு மெத்தைக்குள் மறைத்து இன்னொரு அடங்காப் பிடாரியையோ அல்லது மாமக்தீருக்கு அடங்கிய தஞ்சாவூர் பொம்மையையோ நீங்கள் கொண்டு வந்து நிறுத்தினால் அதற்கும் தலையாட்ட இந்த நாட்டு மக்கள் என்ன தஞ்சாவூர் பொம்மையா? அமீனோ கட்சி மாக்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். இதர மக்களையும் ஒரே துலாக்கோலில் நிறுத்தப் பார்க்காதீர்கள். இதற்குதான் தமிழர் சொன்ன பழமொழி “சோழியன் குடுமி சும்மா ஆடாது”
“எது முக்கியம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்- ஊழல் குற்றத்துக்காக அவரைக் கூண்டில் நிறுத்துவதா, நாட்டைப் பாதுகாப்பதா?”.”
என்ன ஒரு அறிவுகெட்டத்தனமான கேள்வி இது! ஊழல் செய்தவனை விட்டு விட்டு வந்ததனால்தான் மாமக்தீர் காலம் முதல் இன்று வரை இந்நாட்டில் ஊழல் தலை விரித்துத் தாண்டவமாடுகின்றது. இதற்கும் மேல் இப்படி ஒரு ஆலோசனையைக் கொடுக்கச் சொல்லி உங்கள் தலைவர் மாமக்தீர் சொன்னாரா?. எல்லா வகையிலும் நன்கொடை நம்பிக்கை நாயகனை அசைத்துப் பார்த்தீர்கள், பல்லைப் பிடித்துப் பார்த்தீர்கள், ஆனால் ஒரு மயிரையும் புடுங்க முடியவில்லை என்று தெரிந்தவுடன் எதிரிக்கு சிவப்பு கம்பளம் போட்டு வழியனுப்பி வைக்கப் போகின்றாராம்!நீங்கள் எல்லாம் இப்படியே இந்த நாட்டை வழி நடத்தி கெட்டுக் குட்டிச் சுவராக்கி விட்டீர்கள்.
“ரோபர்ட் முகாபே 35 ஆண்டுகளாக ஸிம்பாப்வே அதிபராக இருந்தபோது அந்நாடு பட்ட துன்பங்களை அவர் சுட்டிக்காட்டினார். அவரது ஆட்சியில் ஸிம்பாப்வே பொருளாதாரம் படுவீழ்ச்சி கண்டது. அதன் டாலரும் மதிப்பிழந்து கிடந்தது.”
என்ன ஒரு ஞானோதயம்! “ரோபர்ட் முகாபே” வுடன் கூட்டணி வைத்து டைம் ஸிம்பாப்வேவில் வங்கி உரிமையாளரானது உங்களுக்கு மறந்துப் போச்சோ? மாமக்தீரின் ஒண்ட விட்ட உறவினர் “ரோபர்ட் முகாபே” என்பதை அம்னீசியா வந்து மறந்து விட்டீர்களா? இவன்தாண்ட பசு தோல் போர்த்திய புலி.
“நடப்பு நிலைமை தொடருமானால் அதனால் மோசம் நமக்குத்தான்”, என காடிர் எடுத்துரைத்தார்.”
“மோசம் நமக்கு” என்பதை மாற்றிப் போட்டு “அமீனோ கட்சிக்கு என்று திருத்திப் படியுங்கள். ஓநாய் ஏன் அழுவுது என்று அப்பொழுது புரியும்.
“ஒரு மோசமான தலைவரும் அவரின் மனைவியும் அதைக் குட்டிச் சுவராக்கினர். (பெர்டினண்ட்) மார்க்கோஸ் இறந்து நீண்ட காலமாகி விட்டது. ஆனால், அவரும் அவரின் மனைவியும் ஏற்படுத்திய அழிவிலிருந்து பிலிப்பீன்ஸ் இன்னும் மீட்சி பெறவில்லை.”
இதையே நன்கொடை நம்பிக்கை நாயகனுக்கும் ரோஸ்க்கும் உவமையாகச் சொல்வதாக நினைப்போ? எது பிலிப்பீன்ஸ் – ல் நடந்ததோ அதாண்டா மலேசியாவிலும் நடக்கப் போகுது.
“மார்க்கோஸும் பணத்தைத் தண்ணீர்போல் செலவிட்ட அவரின் மனைவியும் 1986 பிப்ரவரி 25-இல் வெளியேறி இருக்க மாட்டார்கள் அமெரிக்கா அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காமலும் அதிபர் கொராசோன் அக்குவினோ அவர்கள் பத்திரமாக வெளியேற இடமளிக்காமலும் இருந்திருந்தால்”,
இப்ப நன்கொடை நம்பிக்கை நாயகனை வெளியேற்ற ஒபாமா காலில் வீழச் சொல்கின்றீரா? மலாய்க்காரர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வர அமெரிக்கா மாபெரும் புண்ணியம் செஇதிருக்கனுமே. மாமக்தீர் காலத்தில் இருந்து இன்றைக்கு வரைக்கும் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் ஒருத்தன் குசு விட்டாலும் அதற்குக் காரணம் அமெரிக்காதான் என்று அவன் தூதரகத்தின் முன் கொடி பிடித்து ஆர்பாட்டம் செய்வீர்களே, அதையெல்லாம் இப்பொழுது மறந்து அவன் காலிலேயே விழ வேண்டிய நேரம் மாமக்தீர் கூட்டணிக்கும் வந்து விட்டதைப் பார்த்தால் இப்பதான் ‘தெய்வம் நின்று கொல்வதை’ கண் கூடாகப் பார்க்கின்றோம் போல இருக்கு.
“கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படலாம் என்ற பயம்” என்று மாமா மகாதீரும், “ஊழல் குற்றத்துக்காக அவரை கூண்டில் நிறுத்துவதா, நாட்டை பாதுகாப்பதா?” என்று கேள்வி கணைகளோடு மூத்த செய்தியாளர் காடிர் ஜாசினும், ஊழல் நன்கொடை நாயகன் “நஜிப்” மீது மக்கள் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கைக்கும் வேட்டு வைத்து விட்டார்கள்.
”அவர் பதவி விலக மாட்டார் எல்லோருக்கும் தெரிந்ததுதானே (விலகின ஜெய்ல்தான்) ஆனா அவனுங்க இனம் சீரழிஞ்சிடகூடாதுனு இப்போதே உசாரா இருக்கனுமுனு நினைக்கிறாங்க.ஆனா நம்ம (ம.இ.கா)தலைவர்கள் அவகள் பிர்ச்சனையே திராம இருக்கு எப்படி மக்கள் பிர்ச்சனையே திர்க்க போரங்க.!!!
கொல்லை அடித்தவன்களை எல்லாம் வெளி நாட்டில் கொல்லை அடித்த பணத்துடன் வாழ்கையை அனுபவிக்க வா பத்திரமாக வெளி ஏற அனுமத்திக்க வேண்டும்?
குறை கூருவதை நிறுத்தி விட்டு, நஜிப் பத்திரமாக வெளியேற கடவுளை பிராத்திப்போம்.
உலக நாடுகளில் மிகவும் அமைதியாகவும்,சுபீட்சமாகவும் வாழ வேண்டிய மலேசியர்கள் அவதிக்குள்ளாகி சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.தொண்ணூராம் ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா அரசாங் இலாக்காவிலும் மூவின மக்கள் பணியாற்றினர்.அப்பொழுது ஊழல்,லஞ்சம் போன்ற வார்த்தைகளை கேட்பது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் மகாதீரரின் பிரதமர் பதவி பின்னர் மலாய்க்காரர்களின் ஆதிக்கம் தொடங்கியது.இதை முழுக்க அமுல் படுத்திய பெருமை மகாதீரரையே சாரும்.பணி ஓய்வு பெறும் மலாய்க்காரர் அல்லாதவர்களின் இடம் மலாய்க்காரளால் நிறப்பப்பட்டது. இப்படி ஆரம்பிக்கபட்டு தற்பொழுது அரசாங்க பணி என்றால் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது. தொடர்ந்து ஊழலும், லஞ்சமும் வளர்ந்து தற்பொழுது கோடி கணக்கில் திருடியவர்களயும் சிவப்புக்கம்பளம் போட்டு வழியனுப்ப முயற்சி நடைபெற்றுககொண்டிருக்கிறது. எல்ல வளங்களும் கொண்ட நம் மலேசியா பில்லியன் கணக்கில் கடனாளி யாகியுள்ளது. கடன்களை செலுத்துவதற்கு மக்களை சுரண்டுகிறது தற்போதைய அரசாங்கம்.
நாட்டு நிலைமை தெரிந்தும் அம்னோ தலைவர்களும் , உறுப்பினர்களும் ஒன்றுமே தெரியாததுப் போல் இருக்கும் வரைக்கும் நஜிப் பதவி விலக வாய்ப்பே இல்லை…?
பத்திரமாக வெளியேற்ற வேண்டும் என்பது முன்பு நடந்திருக்க வேண்டும்.தற்பொழுது பாதாளம் வரை சென்ற பிறகு வெளியேற்ற நினைப்பது எந்த நன்மையும் இல்லை.
எதுக்கு கடவுளைப் பிராத்திப்பது என்று ஒரு விவஸ்தையே இல்லையா? கொள்ளைக்காரனையும், கொலைக்காரனையும் பத்திரமாக சேது நாட்டின் எல்லையைத் தாண்டி விட்டு வர நாம் எல்லாம் என்ன மெய்ப்பொருள் நாயனாரா?
தேனீ! ரொம்பதான் குதிக்கிறீங்க! எங்களிடம் சிவப்பு சட்டை கும்பல் இருக்கும் வரை எங்கள் நஜிப்பை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. ஜாக்கிரதை! அதுமட்டுமல்ல, அலாவுதீனிடம் அற்புத விளக்கு இருந்ததைப் போன்று, எங்கள் ‘முடியழகி’ ரோசம்மாவிடம் அற்புத மோதிரம் வைத்துள்ளார். சுண்டு விரல் அசைத்தால் போதும், felda ‘வீரர்களை’ களத்தில் இறக்கி விடுவோம். Becareful!
உலக மஹா சாதனையாளரை மிக மிக பத்திரமாகத்தான் வெளியேற இடமளிக்க வேண்டும் .
ரோபர்ட் முகாபே, மார்க்கோஸ் போன்ற உலக சர்வதிகாரிகளின் பட வரிசையில் நஜிப்பின் படத்தை மாட்டாமல் விட மாட்டீர்கள் போலிருக்கிறது. இதையாவது வெற்றிகரமாக நிறைவேற்றி மலாய்காரர்கள் மானம் காக்கும் சிவப்பு சட்டையினரின் முகத்தில் கரி பூசுவீர்கள் என்ற மலேசிய மக்களின் ஆசையை நிறைவேற்றுவீர்களா அல்லது உதவி தொகை என்ற லஞ்சத்தை “நன்கொடை” என்று வாங்கி கொண்டு “நீங்களும் நானும் நெல்லும் அரிசியை போல” என கூடி கூத்தடிக்க போகிறீர்களா என்பதை காண உலகமே காத்திருக்கிறது.
ஐயா இஸ்ரவேல் கோத்திரதாரே !!! 12 இஸ்ரவேல் கோத்திரத்தில் நீங்கள் எந்த கோத்திரம் ?
ஆலோசனைக்கு நன்றி திரு சிங்கம் அவர்களே. நான் இறைவனுக்கு மட்டுமே அடிமை. அடியாட்களை வைத்துக் கொண்டு சர்வாதிகார அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு நான் அடிமை அல்ல.
சிங்கம் நீங்கள் நஜிப்பையும் ரோச்மாவையும் இடித்துரைப்ப து போல் நான் உணருகிறேன் சரியா? இது இருக்கட்டும் பிலிப்பின் தலைவருக்கும் தலைவிக்கும் அமேரிக்கா தஞ்சம் அளித்தும் பிலிப்பின் இன்றுவரை முன்னுக்கு வரமுடிய வில்லை என்றால் அதே தவறை நாம் ஏன் செய்ய வேண்டும். நஜிப்பை …… கூண்டில் நிறுத்தி அவர் திரு… பணத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்து நாட்டு கஜானாவில் போடவேண்டியது தானே.
நாட்டை விட்டு ஓட விட்டால் எப்படி? இப்படியே தவறு செய்பர்கள் எல்லோரும் ஓடினால் நாடு என்னவாகும்? சரி இந்த தப்பி ஓடும் தத்துவம் நஜிப்புக்கு மட்டிலுமா எல்லோருக்குமா? நானும் வங்கியில் கடன் பட்டிருக்கிறேன். காதிர் எனக்கும் ஒரு வழி சொல்லுங்களேன் .என்னையும் பத்திரமாக காப்பாற்றுங்கள் ஐயா.
பத்திரமாக வெளியேற விட்டால், சிரியா போன்று, அல்லது சூடான், லெபனான், லிப்யா, எகிப்து, ஓமன், எமன், ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகளை பாருங்கள். பதவியும், அதிகாரமும், மதமுமே அந்த அந்த நாடுகள் விழ காரணம். உலக இரண்டாம் போர் முடிந்த 70 ஆண்டுகளில், அமெரிக்க 22 நாடுகளின் கதையா முடித்து விட்டது. இப்பொழுது, மலேசியா வின் பொருளாதாரம், ஒற்றுமை சீர்குலைய யார் காரணம்? அவர் அவர்களின் பொறாமை குணங்களே சீண்டி விட்டு குளிர்காயும் இந்த அமெரிக்க ஒன்றே மூல காரணம். இதுவே உலக அரசியல், உங்கள் அரசியல், என் அரசியல்! இப்பொழுது நடப்பது உலக 3 ராம் போர், உணராமல் இருப்பது, நமது பலவீனம்.
மிஸ்டர் Anonymous , மிஸ்டர் தேனீ, என்னுடைய கருத்துக்களில் சிறிதளவு நையாண்டி கலந்துவிட்டது, பொறுத்தருளுங்கள்.