பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தாம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் கைகுலுக்கியது திட்டமிடப்படாத ஒன்று என விளக்கமளித்தாலும் பாஸின் ஆத்திரம் கொஞ்சமும் குறையவில்லை.
அல்-அக்காசா பள்ளிவாசல் தொடர்பில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்குமிடையில் சச்சரவு மூண்டுள்ள வேளையில் நஜிப் சிரித்துக் கொண்டே நெத்தன்யாகுவின் கரத்தைப் பிடித்துக் குலுக்கியதுதான் ஆத்திரத்துக்குக் காரணம் என பாஸ் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார்.
“நண்பர்கள் போலவும் எதுவுமே நடக்காதது போலவும் நஜிப் இஸ்ரேலிய பிரதமருடன் கைகுலுக்கியதன்வழி இஸ்ரேல்மீது அழுத்தம் கொடுக்கவும் அதைப் புறக்கணிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் முஸ்லிம் உலகுக்கு துரோகமிழைத்து விட்டார்.
“ திட்டமிட்டு இன ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருப்பதாக இஸ்ரேலைக் குற்றம்சாட்டி (ஐநா பொதுப்பேரவையில்) அவர் பேசியது ஒரு அரசியல் தந்திரமே தவிர வேறொன்றுமில்லை என்பதைத்தான் அந்தக் கைகுலுக்கல் காண்பிக்கிறது.
“அது பாலஸ்தீனர்களின் அவலத்தை மலேசியா சாதாரணமாகக் கருதுவதைக் காண்பிக்கிறது இஸ்ரேலுக்கு எதிரான நமது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் பலவீனப்படுத்தி விட்டது”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
இது என்ன பேச்சு? இங்கு உள்ள சீனர்களுக்கு சீன தேசவர்கள் சப்போர்ட் செய்ய கூடாது என்றால் பாலஸ்தீனவர்கலுக்கு இங்குள்ள மலாய்காரர்கள் ஏன் சப்போர்ட் செய்ய துடிக்கிறார்கள்?.அடு முடியாது என்றால் இதுவும் முடியாது தானே? யாராவது விளக்கம் தாருங்களேன். பிரதமர் என்ன தவறு செய்து விட்டார்?
பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் “கைகுலுக்கியபோது’ நஜிப் கையுறை அணிந்திருப்பரானால் “HALAL” என்று எடுத்து கொள்ளலாம் இல்லையேல் “HARAM” என்று வியாக்கியானம் பேசினாலும் வியப்பொன்றும் இல்லை.
நிலா கட்சி மக்கள் நீதிக் கட்சியுடன் நெருங்கி நிற்கின்றது என்பதை புலப்படுத்தவும் அதேவேளையில் அமீனோ கட்சியுடனான எங்கள் பின் கதவு உறவு முறித்துக் கொள்கின்றோம் என்றும் இந்த மூதேவி இப்படி ஒரு நாடகம் போடுகின்றான். நேர்மை இல்லாத அரசியல் கட்சிக்கு மத முக்காடு எதற்கு. அவுத்துப் போட்டு அம்மணமாக நின்றாலும் பசு தோல் போர்த்திய புலி, பசு ஆகாது. உன்னுடைய சொரூபம் நாங்கள் அறிந்ததே.
தேனீ உங்கள் பதில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி .