நெகிரி செம்பிலான், கம்போங் உலு திமியாங்கில் குடியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதைத் தடுக்க முயன்ற சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் மற்றும் திமியாங் சட்டமன்ற உறுப்பினர் இங் சின் சாய் இன்று காலையில் கைது செய்யப்பட்டனர்.
வெளியேற்றப்படும் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக காலை மணி 8 லிருந்து அக்கம்பத்து மக்கள் எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
போலீசார் தங்களுடைய கடமையைச் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டதற்காக சுமார் 15 ஆர்ப்பாட்டக்கரர்களை கைது செய்ததாக ஓரியன்டல் டெய்லி கூறிற்று.
இந்த நடவடிக்கையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உடைக்கப்பட்டன.
இன்று காலையில் 15 பேர், இரு டிஎபி மக்கள் பிரதிநிதிகள் உட்பட, கைது செய்யப்பட்டதை சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் ஸாக்கி ஹருன் உறுதிப்படுத்தினார்.
இந்த நாட்டில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இந்த கூறு கெட்ட அம்னோ குண்டர்களுக்கு நாடாளுமன்ற உறுபினர்கள் என்ற எண்ணம். என்ன செய்வது -நம்முடைய தலைகள் எல்லாம் கொள்ளை அடிக்கும் போது இந்த அம்னோ குண்டர்கள் என்ன பிடுங்கி கொண்டிருந்தனர்?
மலேசியாவில் என்பது வருடத்திற்குமேல் வாழும் கம்பத்து மக்களை குண்டர்களை வைத்து அப்புறப்படுத்துவது வாடிக்கையாக ஆகிவிட்டது குறிப்பாக இந்தியர்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்,உதவிக்கு அவ்வேளை ஆளும் கட்சிக்காரர்கள்வரமாட்டார்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் அவர்கள் வாய்க் கிழியப் பேசுவார்கள் இவர்களை இனம் கண்டு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் !
மக்கள் உரிமைகளை போராடுவது நாங்கதான் என மார்தட்டும் மஇகா, ஐ பிஎப், நொல்லா ,தொநேந்திரா,கொவிஎஸ் ,சொபுரமானியா,சொரிவனா,மற்றும் எலும்பு துண்டு கட்சி தலைவர்கள் எங்கே போனிர்கள் ?