இனவாத ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் வலியுறுத்தினார்.
“இப்படிப்பட்ட பேரணிகளால் நிலைமை மோசமாகிறது, பொது அமைதியும் கெடுகிறது.
“இது நாட்டுக்கும் நல்லதல்ல”, என பூலாய் எம்பியுமான நூர் ஜஸ்லான் கூறினார்.
“பொது அமைதிதான் பொருளாதார வளத்துக்கும் இன நல்லுறவுக்கும் நன்னம்பிக்கைக்கும் அடிப்படை”, என்றவர் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பெரும்பாலான பேரணிகள் சட்டவிரோதமானவைதான் என்றாரவர். ஏனென்றால் ஏற்பாட்டாளர்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெறுவதில்லை.
“பேரணி நடத்தப்படும்போது பேரணி நடக்கும் இடங்களின் சொந்தக்காரர்களிடம் அனுமதி பெற வேண்டும். அவர்கள் அனுமதிக்காவிட்டால் பேரணி சட்டவிரோதமானதுதான்”, என்றார்.
இனவாத பேரணியை தூண்டுவதே அம்னோ தலைவர்கள்தானே …? அன்று சிவப்பு சட்டை பேரணியை திரட்டியது யார் மக்களுக்கு பணம் , சாப்பாடு , பேருந்து போக்குவரத்து கொடுத்து கொண்டு வந்ததே நீங்கதானே…?
நம்பிட்டோம் சாமீ
ஆளை விடுங்கடா சாமீ
சொந்த காசிலேயே சூன்னியம் வைத்துக் கொண்ட பிறகுதான் ஞானோதயம் பிறந்ததோ?
போங்கடா நீங்களும் உங்கள் புன்னாக்கு பேச்சும்.
ஆனால் அம்னோ செய்வது இனவாதப் பேரணி அல்ல!
இந்த அரசு ஒழுங்காக ஒற்றுமைக்காக எல்லா மலேசியர்களும் சமம் என்று நடந்திருந்தால் இந் நாடு எங்கோ பொய் இருந்து இருக்கும்– தங்களின் சுய நலத்திற்க்காக செயல் பட்டு இன ஒற்றுமையை நார அடித்து இப்போது இவ்வளவு கர்வத்துடன் பொய்யை அள்ளிவிட்டு நம்மை மடையன் என்று இவ்வளவும். இவனகளுக்கு இவன்களின் அறிவிலித்தனம் தெரியும் ஆனால் தெரியாது.
வந்தேறிகள்தான் என்ற உண்மையை ஒப்பு கொள்ள மனமில்லாமல் கையிலெடுத்த ஆயுதம்தான் இந்த இனவாத பேரணி என்பதையும் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுபவர்களும் அம்னோவினர்தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
இனவாதம் உங்கள் பிடிவாதம்.சுதந்திரம் அடைந்த நாடு,சம உரிமை என்று பெயரளவில் மட்டுமே உள்ளது.பொய் பித்தலாடம் உங்கள் தலைமைத்துவம்.உங்கள் இனவாதத்தினால் எந்த சூழ்நிலையிலும் சிங்கப்பூர் அடைந்த வளர்ச்சி முன்னெற்றம் இந்த நாடு அடைய வாய்ப்பில்லை
பேரணியால் நாடு ஒன்றும் கெட்டுவிடவில்லை மக்கள் பணத்தை திருடுபவர்களால் தான் மோசமடைகிறது . திருடர்கள் திருட்டை திசை திருப்புவதற்காக இனவெறியையும் கொலை வெறியையும் தூண்டுகின்றனர் ,இதில் சில அம்னோ காரர்களுக்கு முக்கிய பங்குண்டு என்பதை பல அரசியல்வாதிகள் மூலம் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது .