ஐஜிபி: எங்களை அரசியலுக்குள் இழுக்காதீர்கள்

igpநாட்டின்  அரசியலுக்குள்  போலீசை  இழுக்க  வேண்டாம்  என்று  இன்ஸ்பெக்டர்  ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

“எங்களை  அரசியலுக்குள்  இழுக்க  வேண்டாம். அரசியல்  விவகாரங்களில்  நாங்கள்  தலையிடுவதில்லை.

“புகார்களின்  அடிப்படையில்  விசாரணை  செய்வதுதான்  எங்கள்  வேலை.  அரசியல்  அறிக்கைகள்……..அதில்  நாங்கள்  தலையிட  விரும்பவில்லை”, என  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  அவர்  தெரிவித்தார்.

அம்னோ  முன்னாள்  உறுப்பினர்   கைருடின்  அபு  ஹாசானும்  அவரின்  வழக்குரைஞர்  மத்தியாஸ்  சாங்கும்  கைது  செய்ப்பட்டதை  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட் குறைகூறியிருப்பது  பற்றி  வினவப்பட்டதற்கு  காலிட்  இவ்வாறு  கூறினார்.