பாஸ் கட்சிக்கு இப்போதைக்கு அம்னோ அல்லது பக்கத்தான் ஹராபானுடன் ஒத்துழைக்கும் எண்ணம் எதுவும் கிடையாது.
இதைத் தெரிவித்த அதன் தேர்தல் இயக்குனர் முஸ்டபா அலி, “இப்போதைக்கு அரசியல் ரீதியில் நாங்கள் ஒத்துழைப்பது பிகேஆருடன் மட்டுமே; வேறு யாருடனும் அல்ல”, என்றார்.
“பக்கத்தான் ஹராபானுடன் தொடர்பில்லை அம்னோவுடனும் அப்படியே”, என முஸ்டபா கோலாலும்பூரில் பாஸ் தலைமையகத்தில் கூறினார்.
பாஸின் முன்னாள் தலைமைச் செயலாளரான முஸ்டபாவிடம் அக்கட்சி அம்னோவுடன் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ளுமா என்று வினவப்பட்டது.
அம்னோ-பாஸ் உறவு 1977-இல் முறிந்து போன பிறகு அதனுடன் அரசியல் ஒத்துழைப்பு இல்லாமல் போய்விட்டது என்றாரவர்.
“அரசியல் ஒத்துழைப்பு கிடையாது. ஆனால், பாலஸ்தீன நெருக்கடி, அணுக்குண்டு போன்ற விவகாரங்களில் ஒத்துழைப்பதில் பிரச்னை இல்லை. மக்களுக்கு நன்மை அளிக்கும் விவகாரமென்றால் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறோம்”, என்றவர் சொன்னார்.
பாஸ் கட்சியை உருக்குலைய வைத்தஇன வெறியன் லிம் கிட சியாங் இருக்கும்வரை பக்காத்தான்’க்கு விடுவு காலம் இல்லை….பாஸ் ஒற்றுமையயை கண்டு dap காரனுங்க பயந்துட்டானுங்க…பாவம் பாஸ் சதி திட்டம் தீட்டிய வலையில் சிக்கி தவிக்கிறது ……ஆழ்ந்த அனுதாபங்கள் !!!
நீங்கள் அவர்களை நம்பி இருக்கின்றீர்கள். அவர்கள் உங்களை நம்பி இருக்கின்றார்கள் . குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி அடுத்த தேர்தலில் குழியில் விழப் போகின்றீர்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது.
இதே போக்கில் மக்கள் நீதிக் கட்சி சென்றால், சிலாங்கூர் சீனர்கள் மனசு வச்சா வச்சதுதான் என்பதை அடுத்த தேர்தலில் வெட்ட வெளிச்சமாக காட்டி விடுவார்கள். சிலாங்கூரில் ஆட்சி அமைக்க அஸ்மின் அலிக்கு ஆளு பத்தாது. அப்புறம் மலாய்க்காரர்கள் கூட்டணி அரசாங்கம் என்று நிலா கட்சியும் அமீனோ கட்சியும் அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளும். அப்புறம் அஸ்மின் அலி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வச்சிக்க வேண்டி இருக்கும்.
நிலா கட்சி ஒரு பக்கம் பெர்காசாவோடு கை கோர்த்துக் கொள்ளும். இன்னொரு பக்கம் மக்கள் நீதிக் கட்சியோடு வாலைக் கட்டிக்கொள்ளும்!. மீனுக்குத் தலையையும் பாம்புக்கும் வாலையும் காட்டும் நிலா கட்சி போன்ற விலாங்கு மீன்களின் நட்பு அஸ்மின் அலிக்குத் தேவையா என்பதை இப்பவே முடிவு செய்து விட்டால் அடுத்த தேர்தலுக்குப் பின் மக்கள் நீதிக் கட்சி சிலாங்கூர் அரசாங்கத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்கும். இல்லையேல், நிலா கட்சிக்கு தற்காலிகமாக தலைமைப் பொறுப்பைக் கொடுத்து சிறுபான்மை அரசாங்கத்தை நிறுவி தக்க நேரம் வரும்பொழுது அமீனோ கட்சி ஆட்சியை கவிழ்க்கும். சீனர்கள் எதையும் வெளியே சொல்லாமல் செய்யும் ஓட்டுரிமை பெற்றவர்கள் என்பதை இந்நாட்டு வரலாறு காண்பித்து உள்ளதை அஸ்மின் அலி மறந்திருக்க மாட்டார் என்று நம்புவோம்.
இது போன்ற கூறு கெட்ட பகுத்தறியும் திறமை இல்லா ISIS -வழி மற்ற இனத்தை குறை சொல்லியே வயிர் வளர்க்கும் ஈன் ஜென்மங்கள்– வெளியே போய் வேலை செய்து பிழைக்க தெரிந்தால் புரியும்– பெரும்பாலான இந்த இனம் எப்படி வயிர் வளர்க்கிறது? எல்லாம் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் வாரி வழங்கப்படுவதனால் தான்.
பாசின் கொள்கை என்றைக்கு இருந்தாலும் ஆபத்தை கொண்டுவரும். அக்கட்ச்சியில் உள்ள தலைவர்கள் கம்பத்தை நிர்வாகம் செய்யலாம் ஆனால் நாட்டையோ ஏன் மாநிலத்தை கூட ஆட்சி செய்ய முடியாது. நாம் இப்பொழுது கண் குடாக பார்க்கலாம். டி ஏ பியின் லிம் இனவெறியன் என்றால் அதிலுள்ள மற்ற இனத்து தலைவர்களுக்கு தெரியவில்லை என்கிறீர்களா?
dap லிம் இன வெறியன் இல்லை என்றால் எதற்கு பாஸ் பதிலாக harapaan ஆதரிக்க வேண்டும் …??…பக்கத்தானில் இந்தியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பாஸ் மற்றும் harapan பதிலாக, ஒரு இந்திய அமைப்பு தேர்தெடுத்து / ஆதரவு அளித்து பகத்தானின் கூட்டணியை மேலும் வலுபடுத்தி இருக்கலாமே….??? இன வெறியன் லிம் கிட சியாங் பக்கத்தனில் உள்ள இந்தியர்களை அடிமையாக வைத்துள்ளான்….இது தான் உண்மை …!!!
“இன வெறியன் லிம் கிட சியாங் பக்கத்தனில் உள்ள இந்தியர்களை அடிமையாக வைத்துள்ளான்….இது தான் உண்மை …!!! ”
இது உண்மை என்றால் குலா முதல் அதற்கு கீழ் உள்ள ஜ.செ.க. தலைவர்களை பழனிவேலு சொன்னது போல் “யூ பிளேடி இண்டியன்” தலைவர்கள் என்று சீனன் நம்மை அங்கே வைத்திருக்கின்றான் என்று சொல்ல வருகின்றீர்களா சிவா கணபதி? இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
சிவகனபதியே , உங்கள் அம்னோ தமிழர் கட்சிகளை அடிமையாக வைத்துள்ளது.57 ஆண்டு அடிமையில் தமிழர் சமுதாயம் என்பதை மறந்துவிடாதிர்கள். அந்த அடிமையின் விளைவுதான் இன்று உரிமை அற்ற சமுதாயமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
அப்படி என்றால் ARM’NO அதிகாரத்தில் இருக்கும் ம இ கா வை போல பக்காதானில் உள்ள இந்தியர்களும் கூஜா தூக்கும் ஜால்ராக்கள் தானா…???விளங்கிடுவோம் …!!!
ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி இரண்டிலுமே இந்தியர்கள் குரல் மேலோங்க வாய்ப்பில்லை.தமிழர்கள் என்று தனி ஒரு தொகுதி கிடையாது.மலாய் மற்றும் சீனர் குரல் எழுப்ப தனி தொகுதி பெரும்பான்மை உள்ளது. மற்ற இனத்தவர் தயவில் உள்ள இந்திய பிரதிநிதிகள் உரிமையை கேள்வி கேட்க வழிஇல்லாதது தான் தமிழர்களின் தலைவிதி.கேள்வி எழுப்பினால் அடுத்த தேர்தல் சீட் கிடையாது.தமிழர்களே நமது உரிமையை நிலைநாட்ட என்ன செய்யலாம் என சிந்திப்பது சிறந்தது.எதிர்கால சவால் நிறைந்தது.
இண்டியன்கள் குறைந்த அளவில் வாக்காளர்களாக இருக்கும் பகுதியில் இருந்து தங்களை நகர்த்தி இண்டியன்கள் அதிகமாக இருக்கும் நாடாளுமன்ற சட்ட மன்ற தொகுதிகளுக்கு நம்மை வாக்காளர் பட்டியலில் மாற்றிக் கொள்வோம். ஒரு தொகுதியில் 30% சதவீதத்திற்கும் மேலாக நம் மக்கள் இருந்தால் வெற்றித் தோல்வியை நிர்னைப்பதில் நாம் ‘king maker’ – ராக செயல்படலாம். ஆளும் கட்சியிலும் சரி, எதிர்கட்சியிலும் சரி அத்தொகுதியை நமக்கு கொடுக்க வேண்டும் என்று உரிமையோடு வற்புறுத்திக் கேட்டுப் பெறலாம். எப்படி தோட்டத்தில் இருந்து நகர்புறத்திர்க்கு வந்தோமோ அதைப் போலவே இண்டியர்கள் அதிகமாக வாழும் பகுதி மேம்பாடு அடைந்த புறநகர் பகுதிகளில் அடையாள அட்டை முகவரியை மாற்றி நம் வாக்குரிமையைப் பதியுங்கள். நம் எதிர்காலத்தை அரசியல் ரீதியில் எதிர்கொள்ள இதுவும் ஒரு வழி. தானைத் தலைவர் அப்படி செய்துதானே பல தேர்தல்களில் வெற்றிப் பெற்று வந்தார்.