கெராக்கான் தலைவர் மா சியு கியோங், நாடாளுமன்றத்தில் ஹுடுட் சட்டம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கப் போவதாக சூளுரைத்தார். தவறினால் அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் உறுதி கூறினார்.
“நாடாளுமன்றத்தில் ஹுடுட் நிறைவேற்றப்பட்டால் என் கடமையைச் செய்யத் தவறியதாக பொருள்படும். அதன்பின்னர் அமைச்சராக இருக்க மாட்டேன்”, எனப் பிரதமர் துறை அமைச்சரான மா கூறினார்.
வாரக் கடைசியில் நடைபெறும் கெராக்கான் ஆண்டுக்கூட்டத்தை ஒட்டி சீன ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கிய மா, பாஸ் பிஎன்னில் சேர்வதை கெராக்கான் எதிர்ப்பதாகவும் கூறினார். கெராக்கானைப் பொறுத்தவரை பாஸ் ஹுடுட்டைக் கைவிட வேண்டும், அப்போதுதான் அதை பிஎன்னில் சேர்த்துகொள்ள உடன்படும்.
இந்த அம்னோ கம்மனாட்டிகள் இப்போது நிலா கட்சியை விட மிகவும் தீவிர நிலா கட்சி. சுதந்திரத்தின் போது நிலை வேறு –அப்போது மூன்று இனங்களும் சமம். ஆனால் இன்றைய நிலை? MIC -MCA சப்பிகள் சப்பிக்கொண்டுதான் இருக்க முடியும் கேட்கவா முடியும்?
என்ன ஒரு கேணத்தனமான பேச்சு. இவரெல்லாம் எப்படி கெரக்கான் கட்சித் தலைவரானோ தெரியவில்லை. ஹுடுத் சட்டத்தை பாஸ் கைவிட்டால் தே.மு. -யில் சேர்த்துக் கொள்ள கெரக்கான் உடன் படுமாம்! சேர்ந்த பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினால் என்ன செய்வீர்?. நீர் வைத்திருப்பதோ 1 நாடாளுமன்ற அமர்வு. அவனிடமோ 20 – க்கு மேற்பட்ட நாடாளுமன்ற அமர்வு உள்ளது. யார் பேச்சு அம்பலம் ஏறும். இந்த அற்ப அரசியல் நுணுக்கம் கூட தெரியாமல் பேசுகின்றாரே இந்த அப்பாவி!. பின்னே வருவதை முன்னே யோசிக்காமல் பினாங்கில் ஆட்சி நடத்தி ஓட்டாண்டியாயி இப்ப ஒன்னுமில்லாமல் இருக்கீங்க. அடுத்து உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா என்று ஆகப் போகுது கெரக்கான் நிலைமை.
யோவ், சும்மா பொய் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஆட்சியாளர்களின் மன்றம் அந்த ஹுடுத் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கத் தவறியதை அறிந்து தான் இந்நாள் கிளாந்தான் மந்திரி பேசார் அந்த சட்டத்தை இந்த தலைமுறையில் கொண்டு வர முடியாது ஆதலால் அடுத்த இளைய தலைமுறையிடம் விட்டு விடுகின்றோம் என்று அறிக்கை விட்டாரு. அப்புறம் கெரக்கான் சவால் விட்டு என்னப் பயன்? அதை விட பாஸ் கட்சி தே.மு. – ல் சேருவதைப் பற்றி யோசிக்காமல், அது சேராமல் இருக்க வழியைப் பாருப்பா.
மக்கள் ஆதரவு வேண்டுமென்பதற்காக இப்படி ஓர் அறிக்கையா??? அம்பலம் ஏறாது!!!!
அமைச்சரே ஹுடுத் சர்ச்சை நிறுத்திவிட்டு விலைஉயர்வை கட்டுபடுத்த கவனியுங்கள்.ஜி எஸ் டி ,பெட்ரோல் டோல் உயர்வு,நாணய மதிப்பு சரிவு, பொருட்கள் விலை உயர்வு,இனத்துவேசம்,பாதுக்கப்பு சரிவு ஆகிய பிரச்சனைகள் மேலோங்கியுள்ளது.முதலில் இதனை சரி செய்ய வழியை பாருங்கள்.
டிராகன் டான்சு ஆடாதே ???