13 நெகிரி செம்பிலான் அம்னோ கிளைகள் பிரதமர் நஜிப் கட்சியின் தலைவை பதவியைத் துறக்க வேண்டும் என்று கோரியுள்ள தீர்மானம் அம்னோவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரஸ்பர ஒப்பந்தத்தை மீறியதாகும்.
அந்த அம்னோ கிளைகள் அவற்றின் கருத்தை சமீபத்தில் நடைபெற்ற அம்னோ பேராளார்கள் கூட்டத்தில் கூறியிருக்க வேண்டும். அக்கூட்டத்தில் நஜிப்புக்கு முழு ஆதரவு அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது என்று தெலுக் கெமாங் அம்னோ தொகுதித் தலைவர் இசா அப்துல் சாமாட் கூறினார்.
அவர்கள் தலைவரை ஆதரிக்கவில்லை என்பதை அப்போதே கூறிவிட்டு இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றாரவர்.
அவர்கள் செய்திருப்பது அவர்கள் அந்த பரஸ்பர ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்பதாகிறது என்று இசாவை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் மலாய் நாளிதழ் கூறுகிறது.
இந்த மக்கள் தலைவர்களாக முடியாது ஏனென்றால் அவர்கள் கோட்பாடற்றவர்கள் என்றார் அத்தொகுதித் தலைவரான இசா. தெலுக் கெமாங் அம்னோ தொகுதி நஜிப்பை தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.
தாமான் டிகேகே கிளையின் தலைவரும் தீர்மானம் நிறைவேற்றியவர்களின் குழுவுக்குத் தலைமையேற்றிருந்தவருமான கமருல் அஸ்மான் ஹபிபுர் ரஹ்மான் 2018 இல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தோல்வியடைவதிலிருந்து அம்னோவை பாதுகாக்கவே அடிமட்ட உறுப்பினர்கள் நஜிப் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர் என்றார்.
ஒப்பந்தத்திற்கு கொடுத்த பணம் போதலையோ?
என்ன மசிரு ஒப்பந்தம் நீயே mb யாக இருக்கும்போது பயங்கர ஊழல் பேர்வழ்ளி இதுவும் X ஆசிரியன் ஆசிரியர்கள் அவமான சின்னம் நீயும் najibbum
இசா! நீங்கள் நாசாவிலிருந்து சூரியனுக்குப் போகும் அளவுக்கு “சூரி” பண்ணி வச்சிருக்கிறீங்க! அதனால பேசுவீங்க!