அலி ருஸ்தாம்: சவால் விடுக்கப்படுமானால், சீலாட் போருக்குத் தயார்

 

Ali rustamசவால் விடுக்கப்படுமானால் போரிடத் தயார் என்று பெசாக்கா (தேசிய சீலாட் பெடரேசன்) தலைவரும் சிவப்புச் சட்டை பேரணி ஏற்பாட்டாளருமான முகமட் அலி ருஸ்தாம் இன்று கூறினார்.

மலாய் இனம், இஸ்லாம் மற்றும் நாட்டின் தலைவர்களின் கௌரவத்தை தற்காப்பதற்காக கோலாலம்பூரில் இன்னும் மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதுதான் செப்டெம்பர் 16 பேரணி என்று அலி கூறினார்.

இந்த வாழ்க்கையில், நமக்கு கௌரவம் இருக்க வேண்டும். நமக்கு கௌரவம் இல்லை என்றால், பணம் முக்கியமானதாக இருக்காது என்று கூறிய அவர், மக்களுக்கு எங்களைப் பிடிக்கவில்லை என்றால் அது பரவாயில்லை. ஆனால் எங்களை அவமதிக்காதீர். எங்களுடைய தலைவர்களை அவமதிக்காதீர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

பெர்சே 4 பேரணியின் போது பிரதமர் நஜிப் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் அடி அவாங் ஆகியோரின் படங்களைப் போட்டு மிதித்ததை அவர் குறிப்பிட்டார்.