யாராவது சவால் விடுத்தால் “போரிடவும்” தாங்கள் தயார் என்று தேசிய சீலாட் கூட்டமைப்பு(பெசாகா)த் தலைவர் அலி ருஸ்தம் மிரட்டியிருப்பது பொது அமைதிக்கு ஒரு மிரட்டல் என்பதால் அதை போலீஸ் விசாரிக்க வேண்டும் என பெர்சே வலியுறுத்தியது..
நேற்றிரவு சீலாட் நிகழ்வு ஒன்றில் பேசியபோது அவ்வாறு கூறிய அலி, மலாய்க்காரர்கள் அவமதிக்கப்பட்டால் பெசாகா அதை வெறுமனே பார்த்துக்கொண்டிராது என்பதைக் காண்பிக்கவே செப்டம்பர் 16 சிகப்புச் சட்டைப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி விலகக் கோரி நடத்தப்பட்ட பெர்சே 4 பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே சிகப்புச் சட்டைப் பேரணி நடத்தப்பட்டது.
“அமைதிப் பேரணி நடத்தப்பட்டு அரசாங்கத்துக்கு மிரட்டலாக விளங்கும் போதெல்லாம் அதி தீவிர மலாய் அமைப்புகள் இதுபோன்று எச்சரிக்கை விடத் தொடங்கி விடுகின்றன.
“இப்படிப்பட்ட அணுகுமுறை கண்டிக்கப்பட வேண்டும், நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால் அது கருத்து மாறுபாடு கொள்ளும் ஜனநாயக உரிமைக்கே குழி பறிக்கிறது.
“இப்படி மிரட்டுவது அமைதியையும் இனங்களுக்கிடையிலான உறவுகளையும் கெடுத்து விடுகிறது. இவ்வளவு பேசும் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை”, எனத் தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே ஓர் அறிக்கையில் கூறீற்று.
எலி ருஷ்டம் சொல்வது குற்றம் அல்ல . மத்தவங்க சொன்னா அவ்வளவுததான் .
பெர்சே செய்தது தவறு என்றால்,அலி ருஸ்தாம் சொல்வது போரிட தயார் அதுவும் சொந்த நாட்டுமகளிடம் இது மிக பெரிய துயரம்.ஆனால் இவர் சொல்லிவிட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கிறார்.சட்டம் என்ன சொல்கிறது?
உண்மை குணம் அறிந்துதான் மக்கள் இந்த இனவெறி மூடனை நாடாளுமன்ற தேர்தலில் தூக்கி எறிந்தனர். இன்னும் கொட்டம் அடங்கவில்லை!!!!
வெள்ளைக்காரன் ஆண்டான் ஜப்பான்காரன் ஆண்டான் என்னைகிடா நீங்க போர் என்று சொல்லி களத்தில் இறங்கி சண்டை செய்தீர்கள் !!!…கைலிக்குள் நுழைந்து இனத்தை பெருக்கிக்கொள்வதில்தானே மிகவும் தீவிரமாக சண்டை செய்தீர்கள்? ………..