அடுத்த ஆண்டில் மக்கள் ரிம13 பில்லியனைக் கூடுதல் வரியாகச் செலுத்துவார்களாம். பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி கூறுகிறார்.
பொருள் சேவை வரி, கலால் வரி, தனிப்பட்டவர் வருமான வரி, நிறுவன வரி என்ற வகையில் இந்த வரி வசூலிக்கப்படும்.
“பலர் நினைக்கலாம் நிறுவன வரியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதில்லை என்று. ஆனால், நிறுவன வரியைச் செலுத்தும் பெரும்பாலோர் சிறிய, நடுத்தர தொழில் நடத்துவோர்.
“பலசரக்குக் கடைகள் போன்றவற்றை நடத்துவோர் இதில் அடங்குவர்”. இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ரபிஸி இதனைத் தெரிவித்தார்.