பக்கத்தான் ஹராபான் பக்கத்தான் ரக்யாட் இரண்டுமே ஒருங்கிருந்து செயல்படுவது முழுக்க முழுக்க சாத்தியம்தான் என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.
1990-இல் அம்னோவிலிருந்து பிரிந்துசென்ற செமங்காட் 46 (எஸ்46) வெவ்வேறு கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டதை அந்த கோட்டா பாரு எம்பி சுட்டிக்காட்டினார்.
எஸ்46, கிளந்தானில் பாஸுடன் இணைந்து அங்காத்தான் பெர்பாடுவான் உம்மா என்ற கூட்டணியையும். டிஏபி, பிபிஎஸ், பிஆர்எம் ஆகியவற்றுடன் சேர்ந்து ககாசான் ரக்யாட் கூட்டணியையும் அமைத்துக்கொண்டு செயல்பட்டது.
“அது இப்போதும் நடக்கலாம். ஒன்று பக்கத்தான் ஹராபான். இனொன்று பாஸையும் பிகேஆரையும் கொண்ட பக்கத்தான் (ரக்யாட்)”, என்றாரவர்.
இரண்டு சக்களத்திகளை ஒரு வீட்டில் வைத்தால் வீடு உருப்படுமா?
சுயநல சந்தர்ப்பவாத கூட்டணிக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? பல்லின வாக்காளர்கள் உள்ள தொகுதியில், மக்கள் நீதிக் கட்சி சீனரை நிறுத்தினாலும், இந்த யானை வாலும எலி வாலும் முடிச்சிப் போட்ட கூட்டணிக்கு சீனன் ஓட்டுப் போட மாட்டான். அதைவிட எதிரணியில் அங்கே நிற்கும் ம.சீ .ச. அல்லது கெரக்கான் கட்சிக்கே ஓட்டுப் போடுவான் சீனன். இப்படி எத்துனை இடம் மக்கள் நீதிக் கட்சி தோர்க்கப் போகின்றது? என்பதை இப்பவே கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் நீதிக் கட்சி போட்டியிடும் 3 சட்டமன்ற தொகுதியில் தோற்றால்கூட, அமீனோ, பாஸ், ம.சீ.ச. கட்சி சிலாங்கூரில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைக்கும். மக்கள் கட்சி நல்லா வாயைப் பிளந்துக் கொண்டு இருங்கள், மக்கள் ஆப்பு வைக்க வசதியாக இருக்கும்.
இன்று பாஸ் கட்சி அரசியலில் தனித்து விடப் பட்டதால் கூட்டுறவை நாடி மக்கள் நீதிக் கட்சியிடம் போகின்றது. மற்ற மாநிலங்களில் தனித்து போட்டியிட பாஸ் கட்சிக்கு தைரியம் இருக்கும் பொழுது சிலாங்கூரிலும் தனித்துப் போட்டியிட தைரியமில்லாமல் கூட்டணி வைப்பது ஏன்? ஏன் இந்த கோழைத்தனம்? கிளாந்தானுக்கு வெளியே வேறு எங்கும் பாஸ் கட்சி இனியும் மாநில ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று தெரியும். அதனாலே பொன் முட்டை இடும் வாத்தான சிலாங்கூர் அரசில் மட்டும் தனது அங்கம் இருந்தால் போதும். பிற மாநிலங்களில் எக்கேடாவது கெட்டுப் போனால் எங்களுக்கு என்ன என்ற சுயநலமே இன்று கூட்டணியை நாடி வருவது. சோழியன் குடுமி சும்மா ஆடாது.
இந்த பெருமை எல்லாம் இன வெறியன் குள்ள நரி லிம் கிட சியாங்கை சாரும்….என்னை பொறுத்த வரை, DAP வை விட பாஸ் எவ்வளவோ மேல் …..மலாய்காரர்கள் சீனனின் (DAP )மேல் வைத்திருந்த நம்பிக்கையை லிம் கிட சியாங் கெடுத்து குட்டி சுவரக்கிவிட்டான் ..
இன வெறியன் என்று ஒரு விரலைக் காட்டி முன்னே இருப்பவரைச் சொன்னால் மூன்று விரல்கள் நம்மைச்சுட்டிக் காட்டும். நம் முகத்தையும் நாமே கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொள்வோமே!