‘ஓயாத அடக்குமுறை’: நஜிப்புக்கு அனைத்துலக அமைப்பு கண்டனம்

hrwசீரமைப்பு  செய்யப்போவதாக  உறுதி  கூறியபடி  பதவிக்கு  வந்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், இப்போது  எதிர்ப்பாளர்கள்மீது  அடக்குமுறையைக்  கட்டவிழ்த்து  விடுகிறார்  அதன்  விளைவாக  அச்சம்  நிறைந்த  சூழல்  உருவாகியுள்ளது  என அனைத்துலக  மனித  உரிமை  கண்காணிப்பு (எச்ஆர்டபள்யு)  அமைப்பு கூறியுள்ளது.

மலேசியாவில் பொது  விவாதங்களுக்கும் சுதந்திரமாக  பேசுவதற்கும்  வாய்ப்புகள்  அருகி  வருகின்றன  ஏனென்றால்,  அரசாங்கம்  குறைசொல்வோரை  அடக்கிவைக்க  குற்றவியல்  சட்டங்களைத்  தொடர்ந்து  பயன்படுத்தி  வருகிறது  என  அவ்வமைப்பு  ‘அச்சுறுத்தல்  கலாச்சாரம்’  என்னும்  தலைப்பில்  வெளியிட்டுள்ள 145-பக்க  அறிக்கையில்  கூறியது.

“அமைதியான  முறையில்  கருத்துரைப்பதைக்  குற்றமாக்கும்  சட்டங்கள்  திருத்தப்படும்  என்ற வாக்குறுதிகளைப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  மலேசிய  அரசாங்கமும்  திரும்பத்  திரும்ப  மீறியிருக்கிறார்கள்”, என எச்ஆர்டபள்யு- வின்  ஆசிய  இயக்குனர்  பிரேட்  ஆடம்ஸ்  கூறினார்.

ஜனநாயகத்தையும்  அடிப்படை  உரிமைகளையும்  மதிப்பதாக  கூறிக்கொள்ளும்  அரசாங்கம்  குறைசொல்வதைக்  குற்றச்செயலாக்குவதன்  மூலம்  அவற்றைக்  கேலிக்க்கூத்தாக்கியுள்ளது  என்றாரவர்.