அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார் என்று வதந்தி பரவி வருகிறது. தலைமைச் செயலாளர் தெங்கு அட்னானைக் கேட்டால் அவர் மெளனம் சாதிக்கிறார்.
“எனக்குத் தெரியாது, அதைப் பற்றிக் கருத்துரைக்க விரும்பவில்லை”, என்றாரவர்.
ஆனால், முகைதினுக்கு எதிராக புகார் வந்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
புகார்கள்மீது நடவடிக்கை எடுகக்ப்படுமா என்று வினவியதற்கு: “கருத்துரைப்பதற்கு இல்லை” என்றார்.
பணம் வாங்கியவன் மனம் மௌனமாகிப் போனதில் ஆச்சரியமென்ன?மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.
இந்த நாட்டின் அரசியல் கட்சி உறுப்பினர்களின் நிலை இதுதான். மானம் மரியாதை அனைத்தையும் விட்டுட்டு தலைவன் போட்ட கோட்டை தாண்டாமல் இருந்தால்தான் பதவி நிச்சயம். இல்லையேல், எந்நேரமும் கட்சியில் இருந்து தூக்கி எறியப் படலாம். அதனால்தான் ஒவ்வொரு கீழ்நிலைத் தலைவரும் மேல்நிலைத் தலைவருக்கு அடிமையாக வாழ்வது. உருப்படுமா சர்வாதிகார அரசியலும் நாடும்?
அடிமட்ட அங்கத்தினரின் சிந்தனையில் மாற்றம் இல்லையேல் இந்நிலை ஒரு தொடர் கதையே!!!!
ஜொகூர் மந்திரி புசாராக இருந்த போது அடித்த சதுப்பு நிலக் கொள்ளைக்கு கிடைத்த பரிசு . இது மகாடீரூகும் , நஜிப்புகும், சங்கிலி முத்துவிற்கும் பொருந்தும்