சிப்பாங் மாவட்டத்திலுள்ள டிங்கில் தமிழ்ப் பள்ளிக்கு பிரதமர் நஜிப் ரசாக் திடீர் வருகை அளித்தது எல்லோருடைய முகத்திலும் ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியுள்ளது என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
அதுவும் இப்பள்ளி அரசின் முழுமானியம் பெற்ற பள்ளி. அங்குள்ள நிலவரம் குறித்து நேரடியாகக் கண்ட பிரதமர் மாணவர்கள் நல்ல கற்றல் கற்பித்தல் சூழலில் இருக்க ஒரு தணிக்கை அறிக்கை தயாரிக்கும்படி கல்வி அமைச்சையும் மலேசிய தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாட்டுத்திட்ட வரைவு பிரிவையும் பணித்துள்ளார். இது பாராட்டுதலுக்குறியது. அரசாங்கப் பள்ளியிலேயே குறைபாடுகள் நிறைய இருக்க கண்ட பிரதமர் மீதம் இருக்கும் 523 பள்ளிகளின் நிலையைக் கண்டால் என்ன சொல்லுவாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றாரவர். [அப்படி ஒன்றை செய்து பிரதமரிடம் பெப்ரவரி 2014 இல் கொடுக்கப்பட்டுள்ளதே!]
திடீர் வருகை தப்பிக்க வழியா?
பிரதமர் என்ற முறையில் அவர் எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் போகலாம . அது அவரின் உரிமையும் கடமையும் கூட. பொதுவாக பிரதமர் ஒரு பள்ளிக்கு வருகை அளிக்கவுள்ளார் என்றால் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வி அமைச்சு கவனிக்கும். பிரதமருடன் கல்வி அமைச்சர் உட்பட பல முக்கிய கல்வி அதிகாரிகள் உடன் இருப்பார்கள் என்பதை குலா சுட்டிக் காட்டினா
மேலும் நடப்பு சூழ்நிலையிலும் அவர் உட்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியிலும் ஒரு தமிழ்ப்பள்ளிக்கு திடீரென வருகை அளித்திருப்பதுதான் நம்மை சிந்திக்க வைத்துள்ளது என்றாரவர்.
அவரின் வருகையானது சில சந்தேகங்களையும் உள்நோக்கங்களையும் கொண்டதாக இருக்கலாம் என்று எண்ணும் குலா இப்படிக் கண்ணோட்டமிடுகிறார்:
1. “தமிழ்ப் பள்ளிகளின் பால் கல்வி அமைச்சு அவ்வளவு அக்கறை காட்டவில்லை என்று நஜீப் நினைக்கின்றார். அமைச்சு நிலையில் ஆரம்பித்து , மாநில கல்வித் துறை,வட்டராகக் கல்வி இலாக வரை இந்த மெத்தெனப்போக்கு, அலட்சியமின்மை, மாற்றாந்தாய் பார்வை இருப்பதை பிரதமர் உணர்ந்துள்ளார் .
2. “இந்தியர்களின் உயிர்நாடியாக விளக்கும் தமிழ்ப்பள்ளிகளை தான் நேரடியாக கண்காணிப்பதன் மூலம் சரிந்து வரும் அவரின் செல்வாக்கை சரி செய்ய அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் சீனர்களும் மலாய்க்காரர்களும் முந்தைய ஆய்வைவிட குறைவாகவும் இந்தியர்கள் மட்டுமே பிரதமரை அதிகமாக ஆதரிப்பதாகவும் செய்தி வந்துள்ளது.
3. “அடுத்த தேர்தலில் இந்தியர்களின் ஆதரவைப் பெற பிரதமரின் வியூகமாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.”
“இது போன்ற நிர்வாகங்கள் இந்த நாட்டிற்கு ஒன்றும் புதியதல்ல. உதாரணத்திற்கு தொழிலாளர் சேம நிதி வாரியம், வழக்கமாக தொழிலாளர் அமைச்சின் கீழ்தான் செயல் பட வேண்டும் . மாறாக அது பிரதமர் துறையின் கீழ் தொன்றுதொட்டே செயல் பட்டு வருகிறது. அதைப்பற்றி யாரும் சர்ச்சயைக் கிளப்பவில்லை.
“போக்குவரத்து உரிமங்களை வழங்குவதற்கு, போக்குவரத்து அமைச்சு இருக்கும் போது அதைவிடுத்து அந்த உரிமங்கள் அனைத்தும் ஸ்பாட் (SPAT) என்னும் ஒரு தனி நிறுவனம் அமைக்கப்பெற்று அதன் கீழ் வழங்கப்படுகிறது. “மாராவை எடுத்துக்கொண்டால் அதன் செயல் பாடுகள் எல்லாம் எந்த ஓர் அமைச்சின் கீழும் வரவில்ல. மலாய்க்காரர்கள், கல்வி சமூக பொருளாதார ரீதியில் முன்னேற, அரசாங்கமே சிறப்பு சட்டங்கள் இயற்றி சுதந்திரமாகவும் தன்னேச்சியாகவும் செயல்பட அதற்கு வேண்டிய அதிகாரங்களை வழங்கி உள்ளது. மாராவிற்கு சொந்தமான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் யாவும் இந்த மாரா இயக்குனர்கள் வழியே நிர்வகிக்கப்படுகிறது. “பெர்மாத்தா எனப்படும் பாலர்பள்ளிகள் பிரதமரின் துணவியார் நிர்வாகத்தின் கீழ் அரசின் நிதி உதவியோடு நடைபெறுகிறது. இது ஏன் கல்வி அமைச்சின் கீழ் வரவில்லை என்று கேட்க யாருமில்லை.
“தமிழ்ப் பள்ளிகள் மாற்றாந்தாயின் பிள்ளை போல அந்த [கல்வி]அமைச்சினால் நடத்தப்படுகின்றபடியால் முறையான ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில்லை. கட்டட பாராமரிப்புக்கும் சிறு சிறு வேலைகளுக்கும் கல்வி இலாக்காவை கெஞ்ச வேண்டிய நிலைமை உள்ளது. பல அரசாங்கப் தமிழ்ப்பள்ளிகள் அதன் பாரமரிப்புக்காக பல நேரங்களில் பொது மக்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. மலாய்ப் பள்ளிகளுக்கு அதிக ஒதுக்கீடுகளும் தமிழ்ப்பள்ளிகளுக்கு குறைந்த ஒதுக்கீடுகளும் வழங்கப்படுவதால் இந்த நிலைமை ஏற்படுகின்றது.
மிச்சம் எங்கே?
“சமீபத்தில் கல்வித் துணை அமைச்சர் ப. கமலநாதன் நாட்டில் உள்ள 237 பள்ளிகளுக்கு 15.4 மில்லியன் ரிங்கிட்டை பகிர்ந்தளித்தார். இது 2013/14 வருட பட்ஜட்டில் உள்ள நிதி ஒதுக்கீடு என்று கூறினார். பிரதமர் துறை கடந்த 2013 , 2014ஆம் ஆண்டுகளுக்கு மொத்தமாக ரிம150 மில்லியன் ஒதுக்கியதாக அறிகிறோம். அப்பணம் கல்வி அமைச்சின் வழியே பள்ளிகளுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது வெறும் ரிம15. 4 மட்டுமே கொடுத்தால் மீதப்பணம்என்னவானது? பிரதமர் துறையினால் கொடுக்கப்பட்ட இந்தப்பணத்தில் புதுப் பள்ளிகள் கட்டப்படுகிறதாக என்ற தகவலும் தெளிவாக இல்லை. ஒரு வெளிப்படையான போக்கும் திறமையான நிர்வாகத் திறனும் பாரபட்சமின்மையும் இல்லாதக் காரணத்தினால் ஒதுக்கப்டட நிதிகள் அதன் இலக்கை அடைவதில்லை. அதே வேளையில் பிரதமரின் நேரடிப்பார்வையில் தமிழ்ப்பள்ளிகளைக் கொண்டு வந்தால் அதற்காக ஒதுக்கப்படும் நிதி அதன் இலக்கை அடைய வெவ்வேறு இலாகாக்களைக் கடந்து நீண்ட தரம் பயணம் செய்யத் தேவையில்லை. நேரடியகவும் விரைவாகவும் விரயமின்றி அதுஅதன் இலக்கை அடையும் .
“நீலப்புத்தக வியூகம் எனப்படும் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் மருந்துக்குக் கூட தமிழ்ப் பள்ளிகளின் நிலைமை குறித்து பேசப்படவில்லை. 200 ஆண்டு வயதை எட்டும் தமிழ்ப்பள்ளிகளை மூடத்தான் அமைச்சர்களும் அதிகாரிகளும்முற்படுகிறார்களே தவிர அதனை வளர்க்கவும் பராமரிக்கவும் அவர்கள் முயற்சி எடுக்கவில்லை.
“அறிவிக்கப்பட்ட 7 புதிய பள்ளிகளில் ஒன்றைத் தவிற மற்றவைகளின் கட்டுமான வளர்ச்சி சமூகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை”, என்ற விபரங்களைப் பட்டியலிட்டுள்ள ஈப்பே பாரட் நாடாளுமன்ற உறுப்பினரான குலா தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடடைய ஆலோசனைகளையும் அளித்துள்ளார். அவை: “பிரதமர் துறையின் கீழ் தமிழ்ப் பள்ளிகள் வரவேண்டும். அவற்குப் போதிய நிதி உதவி வழங்கப் பட வேண்டும். திறமையான தமிழ் உணர்வுள்ளவர்களைக் கொண்டு அத்துறை நிர்வகிக்கப்பட வேண்டும். ”
இவை யாவும் ஒருங்கே அமையப்பெறுமேயானால் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியும் அதன் சாதனையும் நிச்சயம் ஏறுமுகமாக இருக்கும் என்று குலா நம்புகிறார்.
இதற்கு ஆதரவு இருக்குமா இல்லையா என்று சந்தேகம் எழும்பட்சத்தில் பிரதமர் துறை இந்தியர்களிடையே ஒரு சிறப்பு வாக்கெடுப்பு செய்து உறுதிப்படுத்தி கொள்ளவும் முயற்சிக்கலாம் என்று வழிகாட்டும் குலா, இந்த யோசனையை பிரதமர் ஏற்பாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.
இதையும் செய்தால் என்ன?: நாடாளுமன்றத்தையும் பிரதமர் துறையின் கீழ் கொண்டுவந்து விட்டால், குலா அவரது சந்தேகங்களை பிரதமரிடம் நேராடியாகவே தீர்த்துக்கொள்ளலாம்; பிரதமர் நஜிப் நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் போன்றவற்றை சந்திக்க வேண்டியதில்லை, இல்லையா?
சீனரின் ஆதரவை இழந்தாலும் பரவா இல்லை. இண்டியன்களின் 75% ஆதரவைப் பெற்றால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். சிலாங்கூரையும் மீண்டும் கை பற்றி விடலாம் என்று இவருக்கு யாரோ காதில் ஊதி விட்டனரோ? அதற்குத்தான் முன்னோடியாக 2 வருட திட்டம் போட்டு இறங்கியுள்ளார் போலும்.
எல்லாம் இந்த கூறு கெட்ட MIC சப்பிகளால்தான்- துரோகிகள் –இப்படி பட்ட ஈன கையால் ஆகாத ஜென்மங்கள் உருப்படியாக எதையும் சாதிக்க முடியாத மடையர்கள். எல்லாம் அவனவன் வங்கி கணக்கை உயர்த்துவதிலேயே கண் — இனம் மொழி எக்கேடு கேட்டால் என்ன? தைரியம் இல்லா தொடை நடுங்கிகள்–
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு,
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
நாடு என்னசெய்தது நமக்கு என்பதை விட நாம் என்ன செய்தோம் அதற்க்கு என்று நினைத்தால் நன்மை நமக்கு,என்று ஒரு கவிஞர் பாடிவுள்ளார்,
வாழ்க நாராயண நாமம் .
தோட்ட தொழிலாளி குனிந்தான் ரப்பர் மரத்துக்கு, நாடு உயர்ந்தது.
கமலநாதன் குனிந்தான், தன்மானம் …அடைமானம் !!!
இதில் இருந்து என்ன தெரிவது என்றல் அரசாங்கம் கொடுத்த தமிழ் பள்ளிக்கு மானியம் முழுமையாக போய் சேரவில்லை.இந்த நிகழ்வில் துணை கல்வி அமைச்சர் கமலநாதன் கலந்து கொள்ளவில்லையா
பாராட்டுக்குரிய கருத்து en thaai தமிழ். எல்லாம் அவனவன் வாயில் போட்டுக் கொண்டான். பதவிக்காக அடித்துக் கொண்டார்களே தவிர எந்த மயி……யும் எதையும் செய்யவில்லை. பட்ஜேட்ல கோடிக்கணக்கா அறிவிச்சிருக்காரு நஜிப்பாண்டி. எல்லாம் தொழில்முனைவர்களுக்கு,பாமர மக்கள் எல்லா எங்க போவாங்க.ம.இ.கா நா..கள நம்பி நம்பி இன்று வீடு கூட இல்லாம இருக்கறவங்க எத்தனை பேரு நம்ம சமுதாயத்துல.இங்கு அரசாங்கமே சரியில்ல
சங்கிலி முத்து சாமி வேலு மேடையில் நடித்தே கொளையிட்டான் . அவன் இன்னும் பல அண்ண்டுகள் உயிரோடு இருக்கணும் . கலப்பைய சங்கிலி முத்து பரம்பரை வருதுன்னு ஊரார் சொல்லணும்
குலாவின் கருத்து சரியானதே. தமிழ்ப்பள்ளிகளும், தமிழர்கள் வாழ்க்கையும் நமது பிரதமரால் மேம்பாடு அடையுமென்றால் நாம் அவரை ஆதரிப்பதில் தவறு இல்லை. சீனர்கள் எவ்வளவு எதிர்ப்பைக் காட்டினாலும் அவர்களுடைய கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைத்து விடுகின்றன.நமக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தும் ம.இ.கா. காரர்களால் ஏப்பம் விடப்படுகின்றன. நாம் ம.இ.கா.வினரை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற இன வேட்பாளர்களை ஆதரிக்கலாம். நமது முன்னேற்றம் தான் நமக்கு முக்கியம்!
பிரதமர் அவர்களே மலேசியாவில் உள்ள அணைத்து தமிழ் பள்ளிகளையும் அரசு முழு உதவி பள்ளியாக மாற்றுங்கள்.பிறகு உங்கள் விசுவாசத்தை நம்புகிறோம்.அதுவரையில் உங்கள் நம்பிக்கை தெம்பிக்கைதான்.
34 இடை நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் அரசாங்க பயிற்சி பெறும் சும்மா இருகிரார்கலாம் தை முதலில் கவனியுங்கள்