2016 பட்ஜெட்டுக்கு எதிரான வாக்களிப்பில் பாஸ் கலந்துகொள்ளாது என அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார்.
அம்முடிவை பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே ஏற்றுக்கொண்டிருப்பதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
“பட்ஜெட்டை நிராகரித்தல் என்னும்போது நாங்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ள மாட்டோமே தவிர அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க மாட்டோம். எதிர்மறையானவற்றை நிராகரித்து மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களை ஆதரிப்பதே எங்கள் கட்சிக் கொள்கையாம்.
“நாங்கள் ஒத்துக்கொள்ளாத விசயங்கள் பல இருக்கலாம். ஆனால், பட்ஜெட்டை நிராகரிப்பதில் நாங்கள் சேர மாட்டோம்”, என ஹாடி கூறியதாக மலாய் மெயில் தெரிவித்தது.
அமீநோவுடனான உங்களுடைய கூட்டுறவிற்கு நன்றி. தண்ணியில் தத்தளித்துக் கொண்டிருப்பவன் காப்பாற்ற வருபவனையும் தண்ணீருக்குள் இழுப்பானாம். அந்த நிலைதான் இந்த நிலா கட்சிக்கும் வரும்.
“நாங்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ள மாட்டோமே தவிர அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க மாட்டோம். எதிர்மறையானவற்றை நிராகரித்து மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களை ஆதரிப்பதே எங்கள் கட்சிக் கொள்கையாம்”
பட்ஜெட் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமால் இவங்க கட்சி எப்படி “மக்களுக்கு எதிர்மறையானவற்றை” நிராகரிக்க முடியும்? “ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுக்கிட்டாளாம் தாப்பா”. இந்த ஆளு சிந்தித்துதான் பேசுகின்றாரா?
இது பாஸ் கட்சியின் தன் மக்கள் நலம் காட்கும் கொள்கையில் ஒன்று,அப்படியே செய்யட்டும் ,நீங்கள் தான் சாணக்கியனே வருத்தம் ஏன்?,வாழ்க நாராயண நாமம்.
இந்த காய் திரும்பவும் வாலாட்ட ஆரம்பித்து விட்டது. “தன் மக்கள் நலம் காக்கும்” கட்சி என்றால் அதற்கு ஏன் கூட்டணி என்ற போர்வை? அதற்கு ஏன் மக்கள் நீதிக் கட்சியின் தோழமை தேவை? தன் சுய காலிலேயே நின்று வெற்றிப் பெறலாமே! கோட்டான் குடியைக் கெடுக்கும் என்பதை மக்கள் கூட்டணி புரிந்துக் கொண்டுதான் அதை “தனிமை” என்ற அரசியல் இருட்டறைக்குள் போட்டார்கள். இருட்டில் அந்த கோட்டானுக்கு கண் தெரிந்து நண்பரைத் தேடி வரும்பொழுது கூட்டணி சேர எந்த கட்சியும் இல்லை. இதை அறிந்தவுடன், ஆலையில்லாத ஊரில் இலுப்பம் பூ சக்கரை என்பது போல மக்கள் நீதிக் கட்சியைக் கட்டிப் பிடித்துக் கொள்ள முயற்சிக்கின்றது. வருத்தம் ஏனா? வாக்குச் சீட்டில் எப்படி நிலா கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று வயதான பெற்றோருக்கு பயிற்சியளித்து ஓட்டுப் போட வைத்தேனே, அந்த நம்பிக்கையில் மண்ணை வாரிப் போட்ட மகராசன்களைப் பார்த்தால் வருத்தமும் வயிற்றெரிச்சலும் வராதா என்ன?