டிஏபி: ஹாடியின் பட்ஜெட் நிலைப்பாடு பாஸுக்கு பிஎன்னைத்தான் பிடிக்கிறது என்பதைக் காண்பிக்கிறது

budgetபாஸ் 2016 பட்ஜெட்டுக்கு  எதிராக  வாக்களிக்க மறுப்பது  அது  எதிரணிக்  கட்சிகளுடன்  ஒன்றுபட்டிருப்பதாகக்  கூறுவது  பொய்  என்பதை  மெய்ப்பிக்கிறது.

“அவர்கள்  நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பை  ஆதரிக்கவில்லை  என்பது  எங்களுக்கு  ஏமாற்றமளிக்கிறது.

“இது,  பாஸ்  எதிரணியுடன்  ஒன்றுபட்டிருப்பதாக  இதற்குமுன்  கூறியது  உண்மையில்லை  என்பதைக்  காட்டுகிறது.

“உண்மையில்  அவர்கள்  பிஎன்னுடன்தான்  அணுக்கமாக  ஒத்துழைத்து வருகிறார்கள்”, என  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  கூறினார்.