பொதுக் கணக்குக்ழு(பிஏசி) உறுப்பினர்கள் இரகசியம் காக்க உறுதிமொழி எடுக்க வேண்டியதில்லை.
இதனைத் தெரிவித்த பிஏசி தலைவர் ஹசான் அரிபின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் அவர்கள் ஏற்கனவே உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
“பிஏசி உறுப்பினர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதைத்தான் முதன்முதலாக வலியுறுத்தினேன்”. நான்கு மாதங்களுக்குப்பின் இன்று நடைபெற்ற முதலாவது பிஏசி கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஹசான் இவ்வாறு கூறினார்.
இதற்குமுன் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி பிஏசி உறுப்பினர்கள் அக்குழுவில் விவாதிக்கப்படும் விசயங்கள் வெளியில் கசியாதிருக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
குறள் 471
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
வாழ்க நாராயண நாமம்.
தெய்வப்புலவன் வள்ளுவனின் நாமத்தை தினமும் செம்பருத்தி வாசகர்களுக்கு போதிக்கும் காயீ அம்முகுட்டிக்கு நமஸ்காரம் வாழ்த்துக்கள் ..
வாழ்க வள்ளுவன் நாமம் ..வாழ்க தமிழ்