டிஏபி எம்பி டோனி புவா 1எம்டிபி தலைவர் அருள் கந்தா கந்தசாமியுடன் விவாதமிட விரும்பினால் அவர் பொதுக் கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து விலக வேண்டும் என்ற விதியை விலக்க வேண்டும் என்று லிம் குவான் எங் விடுத்த வேண்டுகோளை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஏற்க மறுத்தார்.
1எம்டிபி மீதான பிஏசி விசாரணை முடிந்து அது அறிக்கை வெளியிட்ட பின்னரே புவா-அருள் விவாதத்துக்கு அனுமதி அளிக்க முடியும் என்றாரவர்.
“விவாதம் நடப்பதை நான் தடுக்கவில்லை. விவாதம் பிஏசி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடக்கலாம் என்றுதான் சொன்னேன்”, என்றார்.
புவாவுக்கு பிஏசி விசாரணைக்குட்பட்ட விசயங்கள் பற்றிப் பேச மட்டுமே தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் பண்டிகார் விளக்கினார்.
வெள்ளிக்கிழமை விவாதத்தில் கலந்துகொள்ளும் அருள் கந்தா பிஏசி விசாரணையில் கலந்துகொண்டு சாட்சியம் அளிக்க முடியுமா என புவா(டிஏபி- பெட்டாலிங் ஜெயா உத்தாரா) அவைத் தலைவரை வினவினார்.
“அருள் அறிக்கை விடலாமா, விவாதத்தில் கலந்துகொள்ளலாமா என்றால் பிஏசி-யில் இல்லாதவர்களுக்கு எதிராகத் தடைவிதிக்கும் அதிகாரம் எனக்கில்லை”, என பண்டிகார் கூறினார்.
இதை எப்படி நிப்பாட்டுவது என்று தெரியாமல் தத்தளித்த போது, பன்றிகார் வந்து கை கொடுத்தார். இப்பொழுது நிம்மதி பெரு மூச்சு விடுவார்கள் அமீனோ தலைவர்கள்.
அவைத்தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார்! அதே போல மக்களும் விட்டுக்கொடுக்காமல் இருந்தாலே போதும்!