வெள்ளிக்கிழமை ஆர்டிஎம்-மில் இடம்பெறவிருந்த 1எம்டிபி விவாதத்தின் நேரடி ஒளிபரப்பு இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக இன்று கூறினார்.
பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா விவாதத்தில் பங்கேற்காததே இதற்குக் காரணமாகும்.
“விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்பட மாட்டாது.
“புவா 1எம்டிபி தலைமைச் செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமி விவாதத்துக்கு மட்டுமே (ஒளிபரப்ப) ஒப்புக்கொண்டிருந்தோம்”, என்றவர் நாடாளுமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புவாவுக்குப் பதில் வேறு யாரேனும் விவாதத்தில் கலந்துகொண்டு அதற்கு அருள் கந்தா ஒப்புக்கொண்டாலும்கூட அது நேரடியாக ஒளிபரப்பப்பட மாட்டாது என்றாரவர்.
எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது,நீதி மன்றம் எனும்போது வெற்றி பெறவே யாவரும் ஆலோசிப்பர்,(வழக்கறிஞர் யூகம்.)எதுவுமே தவறில்லை சரியான காரணம் இருந்தால்.
வியாபாரம் துவங்கி லோன் கிடைத்ததும் வாணிபத்தை கலைப்பது வாடிக்கை தானே.நாம் செய்தால் சரி,பிறர் செய்தால் குற்றம்.இது அரசியல் நோக்கம் கொண்டது,நிற்க வாழ்க நாராயண நாமம்.
பல்லை காட்டும் போதே தெரியும் இதெல்லாம் நடக்காத காரியம் என்று!
அன்று மாமா மகாதீர் ஆட்சியில் “WAWASAN 2020” என்று தூரநோக்கு திட்டத்துடன் “மறைமுக ஊழல்” ; இன்று புகீஸ் நஜிப் ஆட்சியில் “1 MALAYSIA” என்ற குறுகியநோக்கு திட்டத்துடன் “நேரடி ஊழல்”, என்பது மலேசிய மக்கள் மட்டுமின்றி உலகமே அறிந்திருக்கும் நிலையில் விவாதம் நடத்தி நீங்கள் என்னத்த புடுங்க போறீங்க !
என்ன புச்சண்டி காட்டுரிங்கள வரும் வராதுநு?பூவா அருள் ஓகேவா…வேற யாரு வந்தா ஒகே இல்லையாம் என்ன சின்னபிள்ள விளையாட்டு இது.நேரடி விவாதாம் சொல்லிவிட்டு இப்ப என்ன பின் வாங்கறது சரி இல்ல இது,எங்கையோ சாலாஹ் ….