அப்படியா, தெரியாதே, கமலநாதன்

சரவாக்கிலுள்ள டயாக்-பெரும்பான்மை இடைநிலைப்பள்ளிக்கு கிளந்தானிலிருந்து ஒரு முஸ்லிம் தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டிருப்பது பற்றிய சர்ச்சை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கல்வி அமைச்சின் துணை அமைச்சர் பி. கமலநாதன் கூறினார்.

ஆனால், அது குறித்து கவனிக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

“நான் இப்போதுதான் அது பற்றி உங்களிடமிருந்து கேள்விப்படுகிறேன். அதன் பின்னணியிலுள்ள உண்மையான காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்கிறேன்”, என்று கமலநாதன் பத்துமலையில் நடைபெற்ற மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியின் போது கூறினார்.