நஜிப் அரசியல் எதிர்ப்பாளர்களை ஒழித்துக்கட்ட போலீசையும் நீதிமன்றத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்

ber suaramபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் போலீசையும் நீதிமன்றத்தையும் பயன்படுத்தி  தேர்தல்களில் போட்டியாக  விளங்கக்கூடிய   எதிர்ப்பாளர்களை  ஒழித்துக்கட்ட  முயல்கிறார்  என பெர்சேயும்  சுவாராமும்  கூறியுள்ளன..

அது ஆரோக்கியமற்ற  போக்கு  என்று  வருணித்த  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  அதைச்  சரிசெய்ய  வேண்டும்  என்றார்.

“நஜிப்  நீதிமன்றங்களைப்  பயன்படுத்தி  எதிர்ப்புகளைச்  சீர்குலைத்து  எதிர்ப்பாளர்களின் போட்டியிடும்  தகுதியைக்  கெடுத்து அடுத்துவரும்  தேர்தல்களை  வெல்வதற்கு முயல்கிறார்”, என  பெர்சே இயக்கக்  குழு  உறுப்பினர்  வொங்  சின்  ஹுவாட்  கூறினார்.

ஆர்ப்பாட்டங்களில்  கலந்து  கொண்டதற்காகவும்  ‘தேச நிந்தனை  கருத்துத்  தெரிவித்ததற்காகவும்  எதிரணித்  தலைவர்கள்  18 பேரின்மீது  விசாரணை  நடப்பதாக  சுவாராமும்  பெர்சேயும் கூட்டறிக்கை  ஒன்றில்  தெரிவித்தன.

அவர்கள்  குற்றவாளிகள்  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்களால்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  போட்டியிட  முடியாமல்  போகலாம்.

அந்த  18 பேரில்  சிலாங்கூர் மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,,  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்,  ஷா  ஆலம்  எம்பி  காலிட் சமட் ஆகியோர்  உள்ளிட்டிருக்கின்றனர்.