பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விரைவில் மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிப்பார்.
பிரதமரைச் சந்திப்பதற்கு நாள் கேட்டு அவரது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டதாகவும் பதிலுக்குக் காத்திருப்பதாகவும் எம்ஏசிசி இன்று அறிவித்திருந்தது.
அது நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரிம2.6 பில்லியன் குறித்து விசாரணை மேற்கொண்டிருக்கிறது.
“அந்த அரசியல் நன்கொடை பற்றி எம்ஏசிசி-இடம் விரைவில் வாக்குமூலம் அளிப்பேன்.
“விசாரணையை விரைவில் முடிப்பதற்கு எம்ஏசிசி-யுடன் ஒத்துழைப்பேன்”, என்று நஜிப் முகநூலில் கூறியிருந்தார்.
எல்லா பொய்களையும் உண்மை போல ஜோடித்துச் சொல்ல வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் சரியாக உள்ளனவா என்று மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில் இவரு சொதப்பி விடப் போகின்றார்.
”நீங்கள் எத்தனை முறை கேட்டாளும் சத்தியமா அது நன்கொடைனு தான் சொல்லுவான்.
உண்மையை சொல்ல ஒரு நொடி போதும். ஆனால் நீ சொல்லப் போவதோ பொய். அதை இன்றைக்கு சொன்னால் என்ன நாளைக்கு சொன்னால் என்ன.
”அந்த நன்கொடை பணம் சவ்தி அரேபியாவில் இருக்கும் எங்க சித்தப்பா குடுத்தது சொல்லுவான்.அங்க யாருக்காச்சும் பணம் கொடுத்து சித்தப்பாவா தத்து எடுத்திருப்பான் இந்த கில்லாடி.அவன் கூட இருக்கிரவன் எல்லாம் ஜால்ராக்கள் பிரதமர் சொன்னாலும் அது கடவுள் சொன்னது மாரி யாரும் எதுவும் கேட்ககூடாது மீரி கேட்டா அவனுக்கு ஆப்பு.இனி கடவுள் தான் காப்பாற்றனும்.
மக்களுக்கு “BR1M” என்ற லஞ்ச பணத்தை “உதவி தொகை”யாக அள்ளி கொடுத்த நான் 2.6 பில்லியன் ஊழல் பணத்தை “நன்கொடை”யாக பெற்று கொள்வதில் என்ன தவறு ? என்று விளக்கம் அளித்து மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்தை திக்குமுக்காட வைக்க போகிறார் நஜிப்.