சட்டவிரோத பேரணியில் பங்கேற்றதாக 18பேர்மீது குற்றச்சாட்டு 15பேர் விடுவிக்கப்பட்டனர்

courtஇன்று  கோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றம்,  2013-இல்  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்   சட்டவிரோத  பேரணியில் கலந்துகொண்டதாகக்  குற்றஞ்சாட்டப்பட்ட  33  சமூக  ஆர்வலர்களில்  15 பேரை  விடுவித்தது.

மீதி 18 பேர்  எதிர்வாதம்  செய்ய  அழைக்கப்பட்டனர்.

அந்த  18பேரின்மீது  சட்டவிரோத  பேரணீயில்  கலந்துகொண்டதாக  குற்றவியல்  சட்டம் பிரிவு  143-இன்கீழ்  குற்றம்  சுமத்தப்பட்டது. அவர்கள்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால்  ஆறு மாதம்வரையிலான  சிறைத் தண்டனை  அல்லது  அபராதம்  அல்லது  இரண்டும்   விதிக்கப்படலாம்.

அவர்களில்  பதின்மர்  கலகம் செய்ததாகக்  குற்றவியல்  சட்டம் பிரிவு 147-இன்கீழும்  குற்றம்  சாட்டப்பட்டுள்ள்னர்.

இக்குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டால்  ஈராண்டுச்  சிறை  அல்லது  அபராதம்  விதிக்கப்படலாம்.