பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சூதாட்ட நிறுவனமான மெக்னம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் தம்மிடமும் தம் இடைத்தரகர்களிடத்திலும் மொத்தம் ரிம60மில்லியன் கொடுத்ததாகக் கூறப்பட்டதை மறுத்தார்.
இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் அன்வார் செனட்டர் எஸ். நல்லகருப்பனின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். அன்வாரின் இடைத்தரகர்கள் என அவரின் மனைவி டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில், அவரின் மாற்றான் தாய் சகோதரர் சுக்மா தர்மாவான் சாஸ்மிடாட்ஜா, செனட்டர் முகம்மட் ஈசாம் முகம்மட் நூர், அஸ்மின் அலியின் துணைவியார் ஷம்ஸிடார் தகாரின் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.
அன்வாரின் புக்கிட் டமான்சாரா இல்லம், டிவோலி வில்லா அடுக்ககத்தின் டென்னிஸ் திடல் ஆகிய இடங்கள் பணம் கொடுக்கப்பட்ட இடங்கள் என்று ஷாபி கூறினார்.
“அப்பட்டமான பொய், உண்மை இல்லை”, என அன்வார் மறுத்தார்.
அன்வார், ஐக்கிய இந்தியர் கட்சித் தலைவரான நல்லகருப்பனுக்கு எதிராக தொடுத்துள்ள ரிம100 மில்லியன் அவதூறு வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்திருந்தார். துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தபோது அன்வாருக்கு அந்த ரிம60 மில்லியன் கொடுக்கப்பட்டதாக நல்லகருப்பன் கூறியதற்காக அன்வார் அவர்மீது அவதூறு வழக்கு தொடுத்தார்
பி கே ஆர் ,துவக்கி மக்களை சேர்த்து நீதிமன்றம் மூலம் அனுவர் பல கோடி ஆர்.எம் சேர்த்துவிட்டார்.நல்ல வாணிபம் வாழ்க நாராயண நாமம்.
60 மில்லியன் எங்கிருந்து வந்தது என்று நல்ல கருப்பனிடம் விசாரிக்க மாட்டாங்களா ? மேக்னம் இந்த லஞ்ச ஊழலை ஏன் இதுவரை வெளியிட வில்லை ? கருப்பன் தந்தது கருப்பு பணமா ? போட்டு கொடைங்க…கருப்பனுக்கு வெள்ளை பின்னால பிதுங்கட்டும் !!
குறள் 471
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்
வழக்கு தொடுப்பது அரசு என்பதை வுணர்க,ஆதாரம் இன்றி சபைக்கு வர மாட்டர்.பொறுத்திருந்து பாப்போம்,
வாழ்க நாராயண நாமம்.
வளயாங்கட்டிகள் விழுங்கியவுடன், மறந்து விடுவார்கள் என்று வெள்ள”கருப்பனுக்கு தெரியாதா …..