போலீசார் பினாங்கு கோடீஸ்வரர் ஜோ லவ்மீதும் மேலும் நால்வர்மீதும் விசாரணை எதையும் மேற்கொள்ளவில்லை என்பதால் இண்டர்போல் மலேசியா அவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை எனத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“அவர்கள்மீது போலீஸ் விசாரணை எதுவுமில்லை அதனால் இண்டர்போல் அவர்களைத் தேட வேண்டிய அவசியமில்லை.
“மேலும், அவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு யாரும் இண்டர்போலைக் கேட்டுக்கொள்ளவும் இல்லை”, என்றாரவர்.
அந்த ஐவர் எங்கே என்று கேட்டிருந்த வொங் சென்னுக்கு(பிகேஆர்- கிளானா ஜெயா) ஜாஹிட் இவ்வாறு பதிலளித்தார்.
ஊழல், ஊழலைக் காப்பாற்ற இண்டர்போலை உதவுமாறு யாரும் கேட்டுக்கொள்ளவும் இல்லை.