வழக்குரைஞர் வி.கே. லிங்கம் இனி வழக்குரைஞராக செயல்பட முடியாது. அட்வகேட் மற்றும் சொலிசிடர் ஒழுங்கு வாரியம் அவர் வழக்குரைஞர் தொழில் நடத்தத் தடை விதித்துள்ளது.
மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் ஸ்டீபன் திருவும் அதை உறுதிப்படுத்தினார்.
“ஆம், வழக்குரைஞர் பட்டியலிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது”, என்றாரவர்.
லிங்கம், எட்டாண்டுகளுக்கு முன் நீதிபதிகளை நிர்ணயம் செய்ய முயற்சி மேற்கொள்வதைக் காண்பிக்கும் காணொளி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்விவகாரத்தை ஆராய 2008-இல் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஐவரடங்கிய அவ்வாணையம் அந்த ஊழலில் தொடர்புகொண்ட முக்கிய புள்ளிகளான லிங்கம், முன்னாள் தலைமை நீதிபதிகள் அஹமட் பைருஸ் ஷேக் அப்துல் ஹாலிம், யூசுப் சின், அம்னோ தலைவர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தொழில் அதிபர் வின்சண்ட் டான் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது.
தெய்வம் நின்று கொன்றது.
குண்டி தொழில் நடத்தலாமே நம்ம shafi மடையன் போல