ஹுசாம் மூசா பாஸ் கட்சியைவிட்டு வெளியேற முடிவு செய்தால் அவரை வரவேற்க பார்டி அமானா நெகாராவில் உள்ள அவரின் முன்னாள் பாஸ் சகாக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
“ஹுசாம் எந்தக் கட்சிக்கும் பெரும் சொத்தாக விளங்குவார். அமானாவில் உள்ள நாங்கள் அவர் எங்களுடன் சேர வேண்டுமென வேண்டிக்கொள்கிறோம். அமானா அவரை வரவேற்கக் காத்திருக்கிறது”, என அதன் தலைமைச் செயலாளர் அனுவார் முகம்மட் தாஹிர் கூறினார்.
பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான், சிலாங்கூரில் ஒற்றுமை அரசை ஏற்படுத்த அம்னோவுடன் ஒத்துழைக்க கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் தயாராக இருந்தார் என்று ஹுசாம் கூறியிருந்தது பற்றி கட்சி அவரிடம் விசாரணை செய்யும் என்பதை உறுதிப்படுத்தினார்
நவம்பர் 24-இல் ஹாடியின் தலைமையில் விசாரணை நடைபெறும்.